Thursday, June 12, 2014
Sunday, June 8, 2014
வயதுக்கு மூத்த பெண்ணை மணம்புரிவது ஏன் ?
பொதுவாகவே தமிழ் கலாச்சாரத்தில் மணமகனை விட வயதில் மூத்த பெண்ணை மணப்பது என்பது சாதரணமாக இல்லை ஆனாலும் ஒரு சிலர் இது போன்ற வயது மூத்த பெண்ணை மனம் புரிகின்றனர். இதற்க்கு என்ன காரணம் என்பதை ஆராய்வதே இந்த பதிவின் நோக்கமாகும்.
மனைவி ஸ்தானமான எழாமிடத்து அதிபதி சனி பகவானுடனோ அல்லது ராகு கேதுவுடனோ சேர்ந்து கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் அவர்களுக்கு தனது வயதை விட மூத்த பெண்ணே மணமகளாக அமைய வாய்ப்பு வலுவாக உண்டு. வயது மூத்த பெண்ணை மணக்கலாமா என்றால் அது அவரவர்களின் மனம் ஒத்து போவதை பொருத்ததே தவிர வேறு ஒன்றுமில்லை.
இந்த உதாரண ஜாதகத்தை பார்க்கலாம். இவருக்கு மீனம் லக்னமாகவும் மகரம் ராசியாகவும் உள்ளது. லக்னத்திற்கு ஏழாவது வீட்டின் அதிபதியான புதன் ஆறாமிடத்ததிபதியான சூரியன் உடனும் கேதுவுடனும் சேர்ந்து நான்காமிடத்தில் உள்ளது. கேது தன்னைவிட வயது மூத்தவர்களைக் குறிக்கக் கூடிய கிரகமாகும் அதனால் தான் கேதுவை ஞான மோட்ச காரகன் என்கின்றனர். இந்த கேது பகவான் தன்னை விட வயது மூத்த ஞானியரையும் ஆன்மீகவாதிகளையும் குறிப்பவர் ஆவார். இந்த ஜாதகர் தன்னை விட ஏழு வயது மூத்த பெண்ணை தனது தகப்பனாரின் பேச்சையும் கேட்டகாமல் மனம் முடித்துவிட்டார். ஏன் தனது தந்தையில் சொல்லையும் தட்டி விட்டு திருமணம் முடித்துள்ளார் ? எழாமிடது அதிபதி கேதுவுடன் மட்டுமல்லாது சூரியனுடனும் சேர்ந்துள்ளார் அல்லவா சூரியன் தந்தையை குறிக்கும் கிரகமல்லவா ? அந்த சூரியன் கேதுவுடன் சேர்ந்து கிரகண தோஷத்தில் உள்ளார். எனவே எல்லா விஷயங்களிலும் தந்தை சொல்லை தட்டாத இந்த மகன் தனது திருமண விஷயத்தில் எல்லை மீறி சென்றுவிட்டார்.
தற்போது இந்த ஜாதகருக்கு நடப்பது ராகு திசை ராகு புத்தி என்பதாலும் இந்த ராகுவானவர் அஷ்டமாதிபதியான சுக்கிரன் சாரம் பெற்றுள்ளதாலும், குடும்ப ஸ்தானத்தில் குளிகன் இருப்பதாலும் , குடும்ப ஸ்தானாதிபதி நீசம் பெற்றுள்ளதாலும் இந்த குடும்பமானது சிறக்கவில்லை என்பதும் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என்பதும் தனிக் கதை. இருப்பினும் தனது வயதைவிட மூத்த பெண்ணை மணக்க கேது பகவான் காரணமாக அமைந்துவிட்டார் என்பதே உண்மை.
மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்பது உண்மை.