இதை பின்பற்றுவது நலம் பயக்குமா ?
சகுனம் என்பது நமக்கு வரும் நல்ல பலன்களையோ அல்லது
தீமையான பலன்களையோ முன்கூடியே அறிவிக்கும் ஒரு எச்சரிக்கை
ஆகும். நாம் சகுனம் பார்த்தாலும் அல்லது பார்க்காவிட்டாலும் அது
நடந்துகொண்டுதான் இருக்கும். சற்றே புத்தியை தீட்டி வைத்துக்கொண்டால்
போதும் நடக்கப்போகும் நிகழ்வுகளின் முடிவுகளை தெளிவாக
அறிந்துகொள்ளலாம். இது மூட நம்பிக்கை அல்ல மேலும் இந்த சகுனத்தை
நமக்கு காட்டும் பொருட்டு வரும் மனிதர்களையோ அல்லது உயிர்
பொருட்களையோ சபிப்பது அல்லது வாழ்த்துவது என்பது பொருத்தமற்றது,
ஆனால் நம்மில் பலர் இதைதான் செய்துகொண்டுள்ளனர். காலையில் யார்
முகத்தில் விழித்தேன் என்று தெரியவில்லை இன்று பூராம் இந்தப்பாடு
படுகின்றேன். என்ற சொல் வழக்கே இதற்க்கு சான்றாகும். ஆனால் அவர்கள்
நமக்கு நன்மையே செய்கிறார்கள் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.
ஒரு காரியத்தை முன்னிட்டு நாம் வெளியே செல்லும்போது அந்த
காரியமானது கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்துடனே
செல்கிறோம் அவ்வாறு அந்த செயல் நடக்காமல் போனால் வருந்துவது
அல்லது கோபப்படுவது என்று இரண்டு காரியங்கள் தான் மனித மனத்தால்
நடத்த முடியும் என்பதே விதியாகும். நாம் ஒன்றும் முற்றும் துறந்த
முனிவர்கள் அல்லவே, ஆசாபாசங்களுக்கு கட்டுப்பட்டு சம்சார பந்தம்
என்னும் சாகரத்தில் உழன்று கொண்டுள்ள ஒரு சாதரணமான மனிதர்களுக்கு
ஊனக்கன்களால் இந்த நிகழ்வை புரிந்துகொள்ளும் மனோ நிலை கிடையாது.
தனது மகனின் தேர்வு முடிவை பார்க்க செல்லும் ஒரு தந்தைக்கு எதிர்வரும்
ஒருவர் அய்யா உங்கள் மகன் தேர்வில் முதல் மாணவனாக தேரிவிட்டான்
என்ற ஒரு சொல்லானது "இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே "
என்பதுபோல இருக்காதா ? அப்போது அவர் நாடி செல்லும் காரியமானது பாதி
வழியே நிறைவேறிவிட்டது, இந்த நிகழ்ச்சியானது எவ்வாறு அந்த தந்தைக்கு
மகிழ்வை தந்ததோ அதே போல ஒரு கடினமான செயலானது நடக்க
இருப்பதை சகுனமனது அறிவிக்கும் போதும் அதை ஏற்றுக்கொள்ளத்தானே
வேண்டும். நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நடப்பது நடந்தே
தீரும். அதன் விளைவுகள் சந்தித்தே ஆக வேண்டும். இந்த உண்மையானது
நமக்கு விளங்கி விட்டால் போதுமானது. நமக்கு அறிவுறுத்தும் சகுன
நபர்களை நாம் சபிக்கமாட்டோம் என்பதே உண்மை. இந்த செயல் வெற்றி
பெரும் அல்லது வெற்றி பெறாது என்ற தகவலை நமக்கு முன்கூட்டியே
தெரிவிக்கும் இவர்கள் நமக்கு நன்மையல்லவா செய்கிறார்கள். முறைப்படி
நாம் அவர்களுக்கு நன்றியல்லவா சொல்ல வேண்டும். சகுனம் என்பது
பொய்யானதாக இருக்கும் பட்சத்தில் இவ்வளவு காலம் வேத காலம் தொட்டு
காலத்தை வென்று நிற்பது என்பது சாதாரணமானது அல்ல. பத்து வருடம்
திரை உலகில் ஒளிரும் நட்சத்திரம் பின்வரும் காலங்களில் கால
வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு யார் என்றே தெரியாமல் போனதை
கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரகாசமாக ஒளிரும் இவர்கள் எங்கோ
சென்றுவிடுகிறார்கள். ஆனால் ஜோதிடமும் ஆன்மீகமும் காலத்தை
கடந்ததும் நிற்கிறது என்றால் அதில் விஷயம் உள்ளதால்தான் .
*******************************************************************************
ஆடி மாதம் தம்பதியர் ஒன்றாக இருந்து கற்பமுண்டானால்
பிரசவம் சித்திரை மாதம் வரும். சித்திரைக்கு அப்பன் தெருவில் நிற்பான்
என்பது பழமொழியாகும். சூரியன் உச்சம் பெரும் மாதம் சித்திரை மாதம்
ஆகும். சூரியன் உச்ச காலத்தில் தன்னுடைய முழு கிரணங்களையும் பூமி மீது
வலிமையாக செலுத்தும். இதனால் அல்ட்ரா வயலெட் கதிர்கள் தாக்கம் மிக
அதிக அளவில் இருக்கும். எனவே இது குழந்தைகளுக்கு உகந்தது அல்ல.
இக்கதிர்கள் இளம் சிசுக்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்பதால்
இக்காலங்களில் பிரசவம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். பொதுவாகவே
ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றால் அவர் மிகுந்த மன
வலிமை உள்ளவராக இருப்பர். யாருக்கும் அடிபணிய மறுப்பர், தான்
சொல்வதே சரி என்னும் மனோநிலையானது இருக்கும். இதே சூரியன்
ஆறாமிடதிலோ அல்லது எட்டாமிடதிலோ உச்சமானால் அவர்கள் அரசாங்க
விரோதமான அல்லது சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்ய சிறிதும்
அஞ்சமாட்டார்கள். இதுவே ஜெயில் கிரகம் எனப்படும். இந்த சூரியன் உச்சம்
பெறுவதோடு ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து ஆறாமிடம் அல்லது
எட்டாமிடத்தில் இருந்து விட்டால் அந்த சாதகனின் தந்தை ஆயுளையே
குறைத்துவிடும். எனவே தான் ஆடியில் பிரித்துவைக்கும் ஒரு முறையை
தமிழன் கண்டு பிடித்தான். இதை வேத காலம் தொட்டு
பின்பற்றிவருகின்றோம். ஆனால் அப்போது இருந்ததை விட தற்காலத்தில்
ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டதால் தற்போது அல்ட்ரா
வயலெட் கதிர்கள் தாக்கம் அதிகமாக உள்ளது என்பது நவீன அறிவியலின்
முடிவாகும். இதைதான் வேத காலங்களிலேயே ஞான திருஷ்டியால்
கண்டுபிடித்து சொல்லி வைத்தார்கள். இந்த தாத்பர்யம் புரியாததால் நமக்கு
இது மூட நம்பிக்கையாக தெரிகிறது. ஆகவே ஆடியில் பிரிந்திருப்பது என்பது
அவசியமானது. !!
*****************************************************************************
தலைச்சன் பையனுக்கும் தலைச்சன் பொண்ணுக்கும் ஆணி மாதம்
தவிர பிற மாதங்களில் தாராளமாக திருமணம் செய்யலாம். இது எல்லா
பஞ்சங்கங்களிலும் இருக்கும் . இதை த்ரிஜேஷ்டை என்பர், ஆனி மாதம் தவிர
மற்ற மாதங்களில் திருமணம் செய்யலாம்.
********************************************************************************
ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாமிடம் என்னும் களத்திர
ஸ்தானத்தில் சுக்கிரனும் சனியும் சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகர் கணவன்
ஆனால் மனைவி மீதும் மனைவியானால் கணவன் மீதும் அதிக பிரியம்
கொண்டவர்களாக இருப்பர். இது மிக நுணுக்கமாக காணவேண்டிய ஒரு
விஷயமாகும். எவ்வாறெனில் எழாமிடத்தில் சனி தனித்து இருந்தால் அந்த
ஜாதகர்களுக்கு திருமணம் நடைபெறுவதே மிக கடினமாகும். அதே
சமையத்தில் எழாமிடத்தில் சுக்கிரன் மட்டும் தனித்து இருந்தால் அது காரகோ
பாவ நாஸ்தி என்று பிருகு சூத்திரம் கூறியபடி குடும்ப வாழ்கை மிக
சிரமமானதாக இருக்கும். ஆனால் இந்த சனி பகவானும் சுக்கிரனும் ஒன்று
சேர்ந்து எழாமிடத்தில் நின்றால் அது யோகமாக மாறிவிடுகின்றது. எதிர்
எதிரான செயல்பாடுகளைக் கொண்ட இரு துருவங்களாக உள்ள இந்த
இரண்டு கிரகங்களும் ஒன்று சேரும்போது அது மிக நல்ல பலன் தரும் கிரக
நிலையாக மாறிவிடுகிறது. எவ்வாறு பாம்பின் விஷமானது உயிரையே
போக்கும் என்றாலும் அதன் வீரியம் குறையும்போது அது உயிர் காக்கும்
மருந்தாக மாரிவிடுகிறதோ அதுபோல இவ்விரு கிரகங்களும் ஏழாமிடத்தில்
சேரும்போது நல்ல பலன்களையே தரும். இம்மாதிரியான கிரக
அமைப்புகளை பெற்றவர்கள் குடும்ப வாழ்க்கையானது இனிமையாக
செல்லும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. இந்த அதீத அன்பினால்தான்
சிலர் மனைவிக்கு சமைதுப்போடுதல் அல்லது துவைத்துப் போடுதல் வீடு
வாசல் பெருக்குதல் போன்ற வேலைகளை செய்கிறார்கள். இம்மாதிரியான
வேலைகள் அவர்களுக்கு சுமையாக இருப்பதற்கு பதிலாக சுகமாக
செய்கிறார்கள்.
*********************************************************************************
லக்னத்திற்கு ஏழாவது வீட்டில் சுக்கிரன், செவ்வாய் இணைந்து
இருந்தாலோ அல்லது சனி, செவ்வாய் இணைந்து இருந்தாலோ இதே கிரக
சேர்க்கை இரண்டாமிடத்தில் இருந்தாலோ அந்த வாழ்க்கை
போராட்டமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஏழாவது
வீட்டில் செவ்வாய் இருந்து அவருடைய திசை நடக்கும் காலம் அது ஆணாக
இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை நிச்சயமாக
திசை மாறி செல்லும் என்பது ஜோதிட கிரந்தங்கள் அறுதியிட்டுக் கூறும்
உண்மையாகும். இம்மாதிரியான ஜாதகன்களே நீதிமன்றத்தின் நெடிய
படிக்கட்டுக்களில் ஏறவேண்டிய நிலை உறுதியாக ஏற்படும். இவர்களுக்கு மறு
திருமணம் மன அமைதியுடனும் நிம்மதியாகவும் ஏற்படும்.
ஏழாவது வீட்டில் சனி நிற்பது திருமணத்தை தாமதப்படுத்தும்,
ஆனால் திருமண தடையாக இருக்காது. பன்னிரண்டு ராசிக் கட்டத்தையும்
ஒரு சுற்று சுற்றிவர சந்திரன் எடுத்துக்கொள்ளும் காலமானது சுமார் ஒரு
மாதமாகும், அதே சுற்றுப்பாதையை சூரியன் சுற்றிவர எடுத்துக்கொள்ளும்
கால அளவானது சுமார் ஒரு வருடமாகும், குரு பகவான் ஒரு சுற்றுக்கு
எடுத்துகொள்ளும் காலமானது சுமார் பன்னிரண்டு வருடங்களாகும், ஆனால்
சனி பகவானோ இதற்க்கு எடுத்துக்கொள்ளும் கால அளவானது சுமார் முப்பது
வருடங்களாகும். அறிவியல் ரீதியாக இதற்க்கு காரணம் சனி பகவான்
சூரியனிடமிருந்து மிக தொலைவில் இருப்பதால் அதனுடைய சுற்றுப்பாதை
மிக நீளமானதாகும். ஜோதிட ரீதியாக சனி பகவான் ஒரு ராசிக்கு இரண்டரை
ஆண்டுகாலம் சஞ்சாரம் செய்வதே காரணமாகும். சனீஸ்வர பகவான் ஏழாம்
இடத்தை பார்த்தாலும் ஓரளவிற்கு திருமணம் தாமதமாகவே செய்யும்
என்பதே விதியாகும்.
சனி மட்டுமே ஏழாவது வீட்டில் இருந்தால் திருமணம் மிக
தாமதமாகுமே தவிர திருமணம் என்பது எட்டாக்கனி அல்ல. இறை அருளால்
திருமணம் தாமதமானாலும் சிறப்பாகவே நடைபெறும். எத்தனையோ
ஜாதகர்களுக்கு ஏழாவது வீட்டில் சனி இருந்தும் மிக சிறப்பான திருமண
வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்களை எனது அனுபவத்திலேயே
பார்த்திருக்கிறேன். இருப்பினும் திருமணமே நடக்க கூடாது என்றால்
அவர்களுக்கு லக்னத்திற்கு இரண்டாம் இடத்து அதிபதியான குடும்பாதிபதியும்
ஏழாம் வீட்டு அதிபதியான களத்திராதிபதியும் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம்
வீடுகளில் மறைந்திருந்தால் இம்மாதிரியான ஜாதகர்களுக்கு உறுதியாக
திருமணம் என்பது இல்லை என்று கூறிவிடலாம் ஆனால் சனி
ஏழில்இருந்தால் திருமணம் ஆகாது என்பது " வெள்ளையாக இருந்தால் பால் "
என்பது போன்றதாகும். எனவே சனி பகவான் எழாமிடத்தில் இருந்தாலும்
அவர்களுக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
அமைதியான திருமண வாழ்க்கை அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
நமது நேயர்களுடைய மிக பெரிய கேள்வியே எழில் சனி பகவான்
இல்லாவிட்டாலும் திருமண வாழ்க்கை என்பது மிக பெரிய போராட்டமாக
இருப்பது ஏன் ? என்பதுதான். இதற்கான ஜாதக அமைப்பை அடுத்த பதிவில்
காண்போம்.
ஒருவரது ஜாதகத்தில் ராகுவும் சூரியனும் சேர்ந்து இருப்பின் அவரது தந்தை அரசியல் செல்வாக்கு உள்ளவரக இருப்பர் .ஜாதகனின் பாட்டனார் புகழ் உள்ளவராக இருப்பர் .ஆதிக்க குணம் உள்ளவராக இருந்திருப்பர் .