ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாமிடம் என்னும் களத்திர ஸ்தானத்தில் சுக்கிரனும் சனியும் சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகர் கணவன் ஆனால் மனைவி மீதும் மனைவியானால் கணவன் மீதும் அதிக பிரியம் கொண்டவர்களாக இருப்பர். இது மிக நுணுக்கமாக காணவேண்டிய ஒரு விஷயமாகும். எவ்வாறெனில் எழாமிடத்தில் சனி தனித்து இருந்தால் அந்த ஜாதகர்களுக்கு திருமணம் நடைபெறுவதே மிக கடினமாகும். அதே சமையத்தில் எழாமிடத்தில் சுக்கிரன் மட்டும் தனித்து இருந்தால் அது காரகோ பாவ நாஸ்தி என்று பிருகு சூத்திரம் கூறியபடி குடும்ப வாழ்கை மிக சிரமமானதாக இருக்கும். ஆனால் இந்த சனி பகவானும் சுக்கிரனும் ஒன்று சேர்ந்து எழாமிடத்தில் நின்றால் அது யோகமாக மாறிவிடுகின்றது. எதிர் எதிரான செயல்பாடுகளைக் கொண்ட இரு துருவங்களாக உள்ள இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேரும்போது அது மிக நல்ல பலன் தரும் கிரக நிலையாக மாறிவிடுகிறது. எவ்வாறு பாம்பின் விஷமானது உயிரையே போக்கும் என்றாலும் அதன் வீரியம் குறையும்போது அது உயிர் காக்கும் மருந்தாக மாரிவிடுகிறதோ அதுபோல இவ்விரு கிரகங்களும் ஏழாமிடத்தில் சேரும்போது நல்ல பலன்களையே தரும். இம்மாதிரியான கிரக அமைப்புகளை பெற்றவர்கள் குடும்ப வாழ்க்கையானது இனிமையாக செல்லும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. இந்த அதீத அன்பினால்தான் சிலர் மனைவிக்கு சமைதுப்போடுதல் அல்லது துவைத்துப் போடுதல் வீடு வாசல் பெருக்குதல் போன்ற வேலைகளை செய்கிறார்கள். இம்மாதிரியான வேலைகள் அவர்களுக்கு சுமையாக இருப்பதற்கு பதிலாக சுகமாக செய்கிறார்கள்
No comments:
Post a Comment