ஜனன ஜாதகத்தில் லக்னத்திலிருந்து மூன்றாம் வீட்டு அதிபதியும் பத்தாம் வீட்டு அதிபதியும் ஒன்று சேர்ந்து இருந்தால் அது ராஜ யோகமாகும்.இந்த கிரக சேர்க்கையில் குறிப்பாக பத்தாம் வீட்டு அதிபதி திசையில் ராஜ யோகத்தை உருவாக்கும். பின்வரும் ஹைதர் அலி ஜாதகத்தில் மூன்றாம் அதிபதியான குருவும் பத்தாம் அதிபதியான சந்திரனும் ஒன்று சேர்ந்து லக்னத்திற்கு இரண்டாமிடமான விருச்சிகத்தில் அமர்ந்து உள்ளனர். இந்த ஜாதகத்தில் பத்தாமிடத்ததிபதியான சந்திரன் திசையில் ஹைதர் அலிக்கு ராஜயோகம் கிடைத்தது. அவருடைய புகழ் நாடெங்கும் பரவியது. சக்ரவர்த்தியாக ராஜ பரிபாலனம் செய்தவர் செவ்வாய் திசையில் அவருடைய ஆயுளை முடித்துவைத்தது.
சந்திர திசை ஏன் யோகம் தந்தது ? செவ்வாய் திசையில் ஆயுள் முடிந்தது எவ்வாறு ? என்பதை விளக்குவதே பின்வரும் ஒளிக்காட்சி !!
No comments:
Post a Comment