Tuesday, April 29, 2014

உங்கள் குழந்தை ஆர்கிடெக்ட் ஆக முடியுமா ?



                  பொறியியல் துறையில் எவர் க்ரீன் டிப்பார்ட்மெண்ட் என்பது கட்டடக்கலையும் மெக்கானிக்கல் துறையும் தான். இந்த கட்டிடக் கலையில் சிறப்பு பிரிவாக உள்ளது  ஆர்க்கிடெக்ட் என்னும் பிரிவாகும் இப்படிப்பை கிட்டத்தட்ட ஒரு டாக்டர் படிப்பு என்றே கூறலாம். ஐந்து ஆண்டுகளாக படிக்கும் இந்த படிப்பானது வருமானத்தை கோடிகளில் கொட்டித்தரும் படிப்பாகும். சாதரணமாக சிவில் இஞ்சினியர்கள் பெரும் வருமானத்தை விட பெருமளவில் சம்பாதிக்கும் வாய்ப்பு இந்த ஆர்கிடெக்ட்  படிப்பவர்களுக்கு உண்டு என்றால் அது மிகை அல்ல. மேலும் இந்த படிப்பானது வேலை வாய்ப்பை வெளிநாடுகளில் பெருமளவில் பெற்றுத்தரும் ஒரு கல்வியாகும்.

                  ஜாதக ரீதியாக இந்த ஆர்கிடெக்ட் படிக்க வாய்ப்பு உள்ளதா என்று காண்பதே இந்த பதிவின் நோக்கமாகும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜாதகங்கள் இந்த ஆர்கிடெக்ட் படித்தவர்களின் சாதகமாகும். .



உதாரணம் : 1


                       மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த சாதகமானது ஒரு ஆர்கிடெக்ட் சாதகமாகும். இந்த ஜாதகத்தில் தொழில் காரகனான சனி பகவான் செவ்வாயுடன் சேர்ந்து லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் நிற்கிறது இதில் சனி பகவான் சத்திரனுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார். எனவே சனி வலுப் பெறுகிறார். அதுமட்டுமல்லாமல் கடக ராசியில் உள்ள சனி ஜலராசியில் உள்ளார். கடகம் நீர் ராசியாகும். எனவே இவர் கடல் கடந்து சென்று பணிபுரியும் வாய்ப்பைப் பெறுகிறார். மேலும் பரிவர்த்தனையில் கும்பத்திற்கு சனி செல்வது ஒரு நீர் ராசியாகும். எனவே இந்த இரண்டு ராசிகளின் படி  இந்த ஜாதகர் வெளிநாடு செல்வது உறுதியாகிறது. இந்த சனியுடன் சேரும் செவ்வாயானவர் இந்த ஜாதகத்திற்கு லாபாதிபதியுமாகிறார். இந்த லாபாதிபதி தொழில் காரகனான சனியுடன் சேருவது தொழிலில்  சிறப்பான இடத்தைக் கொடுக்கும். மேலும் கட்டிட கலைக்கு பூமி காரகனான செவ்வாய் சனியுடன் சேர வேண்டும் அல்லது பார்க்க வேண்டும். இங்கு சனி செவ்வாய் சேர்க்கையுடன் சனி பகவான் அதி பலம் பெற்றுள்ளார். எனவே இந்த ஜாதகர் கட்டிடக்கலை படிக்க வாய்ப்பு உண்டானது. 




உதாரணம் 2: 

                        இந்த ஜாதகத்தில் கட்டிடக் கலை படித்துள்ள இவருக்கு சனி பகவான் செவ்வாயுடன் சேரவில்லை. இருப்பினும் உயர் கல்வி ஸ்தானம் என்னும் ஒன்பதாமிடத்தில் செவ்வாய் உள்ளதால் கட்டிடக்கலை தொடர்பான படிப்பு அமைந்தது. ஆயினும் தொழில் காரகனான சனியுடனோ அல்லது தொழில் ஸ்தானாதிபதியான சந்திரனுடனோ இந்த செவ்வாய் தொடர்பு பெறவில்ல அதாவது இந்த கிரகங்கள் ஒன்று சேரவும் இல்லை. ஒன்றை ஒன்று பார்க்கவும் இல்லை. இது எதை குறிக்கிறது ? இந்த ஜாதகர் தொழில் கல்வி படித்தாலும் தான் படித்த படிப்பை விட்டு விட்டு பைனான்ஸ் தொழில் செய்கிறார்.  தொழில் காரகனான சனியுடன் செவ்வாய் சேர்ந்து இருப்பது இந்த நிலையை  கொடுத்தது.மேலும் சனி நின்ற வீட்டு அதிபதி ஆட்சி பெறுவதால் இவர் ஈடுபட்டுள்ள தொழிலில்  முதன்மையான நிலையை எட்ட முடிந்தது. கல்லூரியில் சேருவதற்கு முன்னமே இவருடைய தொழிலை ஜாதக ரீதியாக நிர்ணயித்து விட்டு பின்னர் படிப்பை தேர்ந்து எடுத்திருந்தால் எவ்வளவோ கால விரயம் பணவிரையத்தைத் தடுத்து இருக்கலாம். 



                                    பொதுவாகவே பெற்றோர்கள் தனது குழந்தைகள் விரும்பும் படிப்பை படிக்க வைப்பதே  சாலச் சிறந்ததாகும், பிரியம் இல்லாமல் அது இஞ்சினியர்  படிப்பாக இருந்தாலும் படிக்க வைத்தால் அது அவருக்கு மட்டுமல்லாது பல பேருக்கும்  பெரிய ரிஸ்க்காக ஆகிவிடும். எனவே பிள்ளைகளுக்கான கல்வி துறையை தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் பெற்ற மதிப்பெண்கள்  அவர்களது விருப்பம் மற்றும் நமது நிதி நிலைமை நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை சரியானதா என்ற ஜோதிட ரீதியான விபரம் ஆகியவற்றை சிந்தித்து தெரிந்தெடுத்தால் அவர்கள் வாழ்க்கை வளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 



                                            ENGINEERS MAKE THE WORLD


Monday, April 28, 2014

எட்டாமிடத்தில் ராகு தரும் பலன் !!



                            ஒரு ஜாதகத்தில் எட்டாமிடமான ஆயுள் ஸ்தானத்தில் ராகு பகவான் இருந்தால் என்னமாதிரியான பலன்களை செய்வார் என்பதை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம். பின்வரும் இந்த ஜாதகத்தை கவனிக்கவும் இதில் ரிஷப லக்னம் மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் லக்னத்திற்கு எட்டாமிடமான தனுசில் ராகு அமர்ந்துள்ளார். ராகுவானவர் தனது திசையில் எப்படி பலன் கொடுத்திருக்கிறார் என்பதை பின் வரும் ஒளிக்காட்சியில் காணலாம்.







Friday, April 25, 2014

உங்கள் குழந்தைக்கு டாக்டர் ஆகும் யோகம் உள்ளதா ?


                                    பிள்ளைகளை பெற்ற அனைவருக்கும் உள்ள பொதுவான மற்றும் நியாயமான ஆசை என்பது தனது பிள்ளைகளை டாக்டர் ஆகவோ அல்லது பொறியியல் வல்லுனாராகவோ உருவாக்க வேண்டும் என்பதே. இதிலும் டாக்டர் படிப்பிற்கு உள்ள மவுசே தனி தான். லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்கக்கூட பிள்ளைகளைப் பெற்றவர்கள் தயாராக உள்ளனர் என்றால் இந்த படிப்பின் மீதுள்ள கிரேஸை என்னவென்று சொல்வது. இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய் ரஷ்யாவிற்கு பிள்ளைகளை அனுப்பி டாக்டர் ஆக்குவதும் தெரிந்த ஒன்றே. நமது நாட்டின் டாக்டர் படிப்பை நிறைய வெளிநாடுகள் அங்கீகரிக்கவில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்தியாவில் டாக்டர் படிப்பு படித்துவிட்டு இங்கிலாந்தில் அல்லது அமெரிக்காவில் டாக்டர் ஆக பணிபுரிய முடியாது என்பது கவனிக்கத்தக்கது. இம்மாதிரியான நாடுகள் நாம் வழங்கும் மருத்துவ பட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்பதால் மீண்டும் அவர்கள் நாட்டில் இதே பட்டப்படிப்பை படிக்க வேண்டும். பின்னர் தான் டாக்டர் ஆக தொழில் செய்ய முடியும். 

                                     ஆனால் நமது நாட்டில் செவிலியர் பட்டம் பெற்றவர்கள் இம்மாதிரியான நாடுகளில் நேரடியாக மருத்துவ துறையில் பணிபுரிய முடியும் என்பதும் இதை சட்ட ரீதியாக அங்கீகரித்து உள்ளனர் என்பதும் ஆச்சரியப்படத்தக்க ஒன்றேயாகும். 

                                     ஜாதக ரீதியாக ஒருவர் டாக்டர் படிப்பு படிக்க முடியுமா ? என்பதை முன்கூட்டியே அறிய முடியுமா ? என்றால் நிச்சயமாக முடியும் என்பதே பதில் ஆகும். இந்த பதிவில் கொடுத்துள்ள ஜாதகங்கள் அனைத்தும் பிரபலமான மருத்துவர்களின் ஜாதகமே ஆகும். டாக்டர் ஆகும் யோகத்தை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பின்வரும் ஒளிக்காட்சியில் காணலாம்.




      
                    மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில் தொழில் காரகனான  சனி பகவான்  கும்பத்தில் ஆட்சி பெற்றுள்ளார். விருச்சிகத்தில் ஆட்சியாக உள்ள செவ்வாய் தனது நான்காம் பார்வையாக சனி பகவானை பார்க்கிறார். ஆக இந்த ஜாதகத்தில் சனி செவ்வாய் பார்வை பலம் பெற்றுள்ளது காரணம் இரு கிரகங்களுமே ஆட்சி பெற்று உள்ளது.  இந்த சனி செவ்வாய் சம்பந்தமே இந்த  ஜாதகரை ஒரு புகழ் பெற்ற மருத்துவராக பணியாற்றும் வாய்ப்பை பெற்று தந்துள்ளது. மிகவும் கை ராசியான மருத்துவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். 


                      மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தை கவனிக்கவும், இந்த ஜாதகத்தில் ஆறாமிடத்தில் ராகுவுடன் உள்ள சனி பகவானை சிம்ம செவ்வாய் தனது எட்டாம் பார்வையாக பார்க்கிறார் . இதிலும் சனி செவ்வாய் சம்பந்தம் பெறுகிறது, ஆனால் சனியுடன் ராகுவும் உள்ளார். செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் பார்ப்பது மட்டுமல்லாமல் செவ்வாய் நின்ற வீட்டதிபதியான சூரியன் நீசம் பெற்று உள்ளதால் செவ்வாய்க்கு நைசார்கிக பலன்களில் ஸ்தான பலம் இல்லாமல் இருக்கிறார். ஆக சனியும் பாதிப்பில் செவ்வாயும் பாதிப்பில் நிர்ப்பதால் இவர் மருத்துவராக பட்டம் பெற்றாலும், மருத்துவ துறையில் சிறக்கவில்லை. மாறாக கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றுகிறார். பலமற்ற சனி செவ்வாய் சேர்க்கையாக இருந்தாலும், மருத்துவ துறையானது இவருக்கு கைவல்யம் ஆனாலும் ஒரு தொழிலாக மருத்துவத்தை இவரால் அணுக முடியவில்லை. இருப்பினும் மருத்துவ கல்வி பெறுவதற்கு இந்த சனி செவ்வாய் சம்பந்தமே போதுமானதாக இருக்கிறது.


              மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தை பார்க்கவும், இதில் சனி பகவான் ராகுவுடன் சேர்ந்து உச்சம் பெற்று தந்து எழாம் பார்வையாக கடகத்தை பார்க்கிறார், அதே கற்கடக ராசியை சனியானவர் ரிஷபத்திலிருந்து சந்திரனுடன் சேர்ந்து தந்து மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். ஆக இங்கு சனி செவ்வாய் சம்பந்தம் என்பது லக்னத்திற்கு ஏழாமிடமான கடக ராசியில் பார்வை பலனாக உள்ளது. ஆனால் சனி செவ்வாய் நேரடியாக சம்பந்தம் பெறவில்லை, எனவே இவரது பெற்றோரின் விருப்பப்படி லச்சக்கணக்கில் பணம் செலவு செய்து மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி படித்துள்ளார். இருப்பினும் ஒரு கௌரவத்திற்காக மருத்துவர் பட்டம் பெற்றாலும் இவர் தனித்து மருத்துவ தொழில் செய்ய துணிவில்லாமல் ஒருவரிடம் அடிமையாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்.  இதற்க்கு காரணம் சனியும் செவ்வாயும் பலம் பெற்று சம்பந்தம் பெற்றால் மட்டுமே மருத்துவத்தில் பரிமளிக்க முடியும் என்பதே விதியாகும். இது போன்ற ஜாதகங்களை அவர்கள் விருப்பத்திற்கு படிக்க வைத்திருந்தால் இவருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருந்திருக்கும். இவருக்கு விருப்பமான ஒரு துறையில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருப்பார். எனவே மருத்துவ கல்லூரியில் தந்து குழந்தைகளை சேர்க்கும் முன்னர் அவர்களின் விருப்பத்தை கேட்டு வாழ்க்கை வழியை நிர்ணயிப்பது என்பது மிக முக்கியமானது ஆகும்.

                           மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்று கல்வி காரகனான புதனுடன் சேர்ந்து மகர ராசியிலிருந்து எட்டாம் பார்வையாக லக்னத்திற்கு ஒன்பதாமிடமான சிம்மத்தை பார்க்கிறார், இந்த சிம்ம ராசியானது லக்னத்திற்கு ஐந்தாமிடத்திர்க்கு ஐந்தாமிடமாகும் அதாவது உயர் கல்வி ஸ்தானமான மேஷத்திற்கு ஐந்தாமிடமாகும். ஆக உச்ச நிலை பட்டம் பெரும் அமைப்பாகும் அதற்க்கு ஏற்றார்போல வித்தை ஸ்தானமான குரு பகவான் தனது ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று உச்சம் பெற்ற அசுர குருவுடன் சேர்ந்து உள்ளார். மேலும் ஏழாமிடமான மிதுனத்தில் தனித்த நிலையில் உள்ள சனீச்வரன் தனது மூன்றாம் பார்வையாக செவ்வாய் பார்வை பட்ட சிம்மத்தை பார்க்கிறார். எனவே சனி செவ்வாய் பார்வை சம்பந்தம் இங்கு ஒன்பதாமிடமான சிம்மத்திற்கு கிடைகிறது. மேலும் இங்கு சனி செவ்வாய் நேரடியாக சம்பந்தம் பெறவில்லை எனவே இந்த ஜாதகர் நில ராசியான மகரத்தில் செவ்வாய் நிர்ப்பதாலும் புதன் சேர்க்கை பெறுவதாலும் சித்த மருத்துவத்தில் உயர் பட்டம் பெற்றுள்ளார். இங்கு புதன் தமிழ் வித்தைக்காரன் என்பது குறிபிடத்தக்கது. எனவே இவருக்கு தமிழ் வைத்தியமான சித்த வைத்தியத்தில் நிபுணத்துவம் பெற ஏதுவாக இவரது ஜாதகம் இருக்கிறது. 


                          மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் கும்பத்தில் கிரக கூட்டத்தில் உள்ள செவ்வாய் சிம்மத்தில் உள்ள சனியால் நேரடியாக பார்க்கப் படுகிறார். இவரும் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் ஆவார். அரசு வேலையில் உள்ள இந்த ஜாதகத்திர்க்கான மருத்துவ படிப்பு என்பது  இவரது பெற்றோர்களால் பெரும் பொருள் செலவு செய்து மருத்துவராக படிக்க வைத்து உள்ளனர். இவரும் உச்சம் பெற்ற குரு தந்து ஏழாம்  பார்வையாக லக்னத்தை பார்ப்பதால் தனது துறையில் புகழ் பெற்று விளங்குகிறார். இங்கு சனி செவ்வாய் பார்வையானது நேரடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நேரடியாக சனி செவ்வாய் சம்பந்தம் இல்லாவிட்டால் இவரும் சித்த மருத்துவம் அல்லது ஓமியோபதி மருத்துவம் போன்ற பட்ட படிப்பை பெற்று இருப்பார். இந்த நேரடியான சனி செவ்வாய் சம்பந்தம் இவருக்கு அல்லோபதி மருத்துவ பட்டத்தை கொடுத்து, அரசு வேலையையும் தந்து, புகழ் பெற்ற மருத்துவராகவும் பெயர் எடுக்க வைத்து சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுத்த இந்த சேர்க்கையானது இரண்டாமிடம் மற்றும் எட்டாமிடமாகப் போனதால் குடும்ப வாழ்க்கை என்பது கானல் நீராகிப் போனது என்பதே சோகமான ஒரு செய்தியாகும். இருபினும் தந்து துறையில் அழியா இடம் பெற்ற இந்த ஜாதகம் ஒரு சிறந்த மருத்துவர் என்றால் அது மிகையல்ல.


                              மேலே கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் சனி பகவான் ஏழாமிடத்தில் கடகத்தில் நின்று லக்னத்தை முழுப் பார்வையாக பார்கிறார்,  லக்னத்தை  செவ்வாய் தனது எட்டாம் பார்வையாக பார்க்கிறார். இந்த ஜாதகர் புகழ் பெற்ற மருத்துவர் ஆவார், சனி செவ்வாய் சம்பந்தம் ஆனது லக்னத்திற்கு ஏற்ப்பட்டதால் தொழில் துறையில் பிரகாசிக்க முடிந்த இவரது சாதகமானது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சமாளிக்க முடியாமல் தனது குழந்தையுடன் தனியாக வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகிவிட்டார். இருப்பினும் இந்த ஜாதகர் தனது தொழிலில் முன்னிலையில் உள்ளார்.  ஆக சனி செவ்வாய் சம்பந்தம் எப்படியும் மருத்துவத்துறையில் முன்னிலைக்கு வழிவகுக்கிறது என்றால்  அது மிகையல்ல. 



                              பொதுவாகவே பெற்றோர்கள் தனது குழந்தைகள் விரும்பும் படிப்பை படிக்க வைப்பதே  சாலச் சிறந்ததாகும், பிரியம் இல்லாமல் அது டாக்டர் படிப்பாக இருந்தாலும் படிக்க வைத்தால் அது அவருக்கு மட்டுமல்லாது பல பேருக்கும்  பெரிய ரிஸ்க்காக ஆகிவிடும். எனவே பிள்ளைகளுக்கான கல்வி துறையை தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் பெற்ற மதிப்பெண்கள்  அவர்களது விருப்பம் மற்றும் நமது நிதி நிலைமை நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை சரியானதா என்ற ஜோதிட ரீதியான விபரம் ஆகியவற்றை சிந்தித்து தெரிந்தெடுத்தால் அவர்கள் வாழ்க்கை வளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

                                       மருத்துவத்துறையாக  இருந்தாலும் மற்று எந்த துறையாக இருந்தாலும் உங்களது தேர்வு சரியானதாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர்களது வாழ்க்கைச் சக்கரமும் சிக்கலாகி பெற்றோர்களின் பொருளாதாரம் எதிர்பார்ப்பு  போன்றவையும் பாதிக்கப்படும் என்றால் அது மிகையல்ல. எனினும் பிள்ளைகளின் சரியான துறை என்பது அவர்களின் வாழ்க்கையைக் செதுக்கும் சிற்பக்கலையே ஆகும். எத்தனயோ குழந்தைகள் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுவிட்டு சாதாரணமான வேலைகளை செய்வதை அல்லது சொந்த தொழில் செய்வதை பெரும்பான்மையாகக் காணலாம். அலோபதி மருத்துவத்தில் பட்டம் பெற்ற ஒருவர் சுமார் பத்து  இடங்களில் மருத்துவ மனை வைத்து எடுத்துவிட்டு, பல மருத்துவ மனைகளில் வேலைபார்த்தும் சரியாக வராமல் முறுக்கு,மிச்சர்,மிட்டாய் போன்றவற்றை எடுத்துக்கொண்டு மாருதி வேனில் சென்று  வியாபாரம் செய்யும் ஒரு மருத்துவரும் இருக்கிறார் என்பது ஆச்சரியம் அளிக்கும்  ஒருன்றேயாகும். இதெல்லாம் சரியான பாதையை தேர்வு செய்யாததால் ஏற்ப்படும் இழப்பேயாகும். 


திருச்சிற்றம்பலம் 

Sunday, April 6, 2014

ராகுவும் குடும்ப வாழ்க்கையும்

             

                                                                       


                         ஜாதகத்தில் ராகு அல்லது கேது பகவான் லக்னத்திற்கு இரண்டாமிடத்திலோ அல்லது எழாமிடத்திலோ இருந்தால் அது சர்ப்ப தோஷம் பெற்ற ஜாதகம் எனப்படுகிறது. இவ்வாறு ராகு கேது உள்ள ஜாதகங்களுக்கு இன்னொரு நாக தோஷம் உள்ள ஜாதகத்தை மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது எப்படி செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு இன்னொரு செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை சேர்க்க வேண்டும் என்று சொல்கின்றோமோ அதே போல இந்த சர்ப்ப தோஷத்திற்கும் சொல்வது என்பது வித்தியாசமான நிபந்தனை ஆகும். இதற்கும் ஒரு படி மேலே போய்  ஒரு சில ஜோதிடர்கள் நீங்கள் பார்க்கும் வரனுக்கு இரண்டாமிடத்தில் ராகு அல்லது எட்டமிடத்தில் ராகு இருக்க வேண்டும் அதே போல சனி ஐந்தாமிடத்தில் இருக்குமாறு ஜாதகம் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதோடு மட்டுமல்லாமல் ஜாதகம் பார்க்க செல்பவர்கள் கைகளிலேயே குறித்தும் கொடுத்து அனுப்புகிறார்கள். 

         வரன் தேடும் பெற்றோர்களும் இந்த குறிப்புகளை கைகளில் வைத்துக்கொண்டு திருமண தகவல் மையங்களில் கடலில் ஊசியை தொலைத்து விட்டு தேடுவதுபோல தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.ஒவ்வொரு பெற்றோரும் இந்த வரன் அமைந்து திருமணம் கை கூடுமா அல்லது அந்த வரன் அமைந்து திருமணம் கூடுமா ? என்ற மிகுந்த எதிர்பார்ப்போடு பரிதவிப்பது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய நிகழ்வாகும். மிகுந்த சிரமத்திற்கு பின்னர் ஒரு வழியாக எழில் ராகு அல்லது எட்டில் கேது இரண்டில் சனி என்பது போன்ற ஜாதகத்தை கண்டுபிடித்தபின் அந்த வரனின் படிப்பு வசதி , வேலை , தொலைவு , சமூக அந்தஸ்த்து , இதுபோன்ற காரணங்களால் பொருந்தாமல் போய்  விடுவதும் உண்டு. எனவே இது போன்ற சமுதாய காரணிகளை முன்னிறுத்தி தனது தேடுதலில் கிடைத்த ஜாதகங்களை ஜோதிடரிடம் கொண்டு சென்றால் அவர் ஒரே வரியில் இந்த ஜாதகம் எட்டில் கேது இல்லை எனவே பொருந்தாது என்பது போன்ற பதில்களை ஜோதிடர்கள் சொல்லும்போது ஏற்படும் மன வருத்தமானது சொல்லில் அடங்காது. ஒரு முறை திருமண தகவல் மையத்தில் ஜாதகம் தேர்ந்து எடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு நண்பர் கூறிய  வார்த்தை இன்னும் காதில் ஒலித்துக்கொண்டு  உள்ளது.      " இந்த இடத்தில் ராகு இருக்கவேண்டும் அந்த இடத்தில் கேது இருக்க வேண்டும் என்பது போன்ற ஜோதிடர்களின் தகவலுடன் இங்கு வரனின் கோப்பை தேடும் பொது எதோ ஆங்கிலப் படத்தை புரியாமல் பார்ப்பது போன்று  உள்ளது  " என்ற அவரது வார்த்தை மிக மன வேதனை அடைந்து இருப்பதை அப்பட்டமாக காட்டுகிறது. 

                ஒரு வழியாக இந்த சோதனைகள் எல்லாம் முடிந்தபோது குறிப்பாக பெண் வீட்டாராக இருந்து விட்டால் இன்னும் சோதனை முடியவில்லை என்பது போன்று ஆகிவிடுகிறது. 

                                                                           

                       மேலே கொடுக்கப்பட்டுள்ள  உதாரண ஜாதகம் ஒரு மாப்பிள்ளை ஜாதகமாகும்  இதில் நடப்பு தசை ராகு தசை குரு புத்தி. இந்த ஜாதகத்தில் எட்டில் குரு செவ்வாயுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது. அயன சயன போகாதிபதியான குருவினுடைய புத்தியில் நிச்சயமாக திருமணம் நடந்துவிடும். அனால் இந்த குரு புத்தி சுமார் ஒரு வருடத்தில்  முடிந்துவிடும்.பின்னர், நடக்க போகும் சனிபுத்தியானது ஏழாமிடத்தில் வக்கிர கதியில் உள்ளது, பொதுவாக மூன்றாமிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ தனிமையில் இருந்து திசை நடத்தும்போது அவர்களுக்கு அமைதியான அல்லது நிம்மதியான குடும்ப வாழ்க்கை கிடைப்பது இல்லை. எனவே இந்த உதாரண ஜாதகத்தில் குரு புத்தி முடிந்தவுடன் துவங்கும் சனி புத்தியானது நிச்சயமாக குடும்ப வாழ்வில் பிரச்சனைகளை உருவாக்கப் போகிறார். மேலும் ராகு சட்ட ரீதியான கிரகம் என்பதால் இவருடைய வாழ்க்கையில் குடும்ப பிரச்சனைகளுக்காக நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை ஏறவேண்டிய சூழ்நிலையை உருவாக வாய்ப்பு  உண்டு. 

                 ஆனால் நடப்பது என்ன ? இந்த மணமகனின் பெற்றோர்கள் தங்கள் வரனுக்கு ஐம்பது சரவன் நகை மற்றும் சீர்வரிசைகள் என்று தங்களது எதிர்பார்ப்பை கூறியுள்ளனர். இவ்வளவு நகை சீர் வரிசைகளுடன் வரும் ஒரு பெண் எவ்வாறு இந்த மாமியார் அல்லது மாமனாருக்கு அடிப்படை தேவைகள் மற்றும் சேவைகளை செய்வார். இந்த அளவு சீர் வரிசை செய்ய தகுதியுடைய பெற்றோர்கள் தங்களது மகளை எந்த அளவுக்கு படிக்க வைத்து இருப்பார், எந்த அளவுக்கு செல்லமாக வளர்த்து இருப்பார். எந்த வேலையும் செய்ய விடாமல் தனது மகளை படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த வைத்து இருப்பார். அடுத்த வீட்டுக்கு செல்லும் பெண்தானே அவள் இங்கு இருக்கும்வரை சந்தோஷமாக இருக்கட்டும் என்று தந்து மனைவியையும் வேலை சொல்ல விடாமல் வைத்து வளர்த்திருப்பார். 

                          இவ்வளவு கேப்பிடேசன் பீஸ் கொடுத்து வந்துவிட்டு வேலையும் பார்த்து சம்பளத்தையும் கொடுத்துவிட்டு அடிமையாக இருக்க வேண்டும் என்பர். இங்கு தான் பிரச்னை விஸ்வருபம் எடுக்கிறது. எனவே பிரிவு என்பது தவிர்க்க முடியாததாகிறது. இருப்பினும் இந்த மாதிரி ஜாதகங்களை தெரிந்து எடுத்து விலக்குவது முக்கியமானதாகும். பத்து ரூபாயிக்கு கத்திரிக்காய் வாங்குவதையே அமுக்கி பார்த்து நசுக்கிப்பார்த்து வாங்கும் நாம் மாப்பிள்ளை தேர்ந்து எடுப்பதில் எந்த அளவு கவனமாக இருக்கவேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.