பொறியியல் துறையில் எவர் க்ரீன் டிப்பார்ட்மெண்ட் என்பது கட்டடக்கலையும் மெக்கானிக்கல் துறையும் தான். இந்த கட்டிடக் கலையில் சிறப்பு பிரிவாக உள்ளது ஆர்க்கிடெக்ட் என்னும் பிரிவாகும் இப்படிப்பை கிட்டத்தட்ட ஒரு டாக்டர் படிப்பு என்றே கூறலாம். ஐந்து ஆண்டுகளாக படிக்கும் இந்த படிப்பானது வருமானத்தை கோடிகளில் கொட்டித்தரும் படிப்பாகும். சாதரணமாக சிவில் இஞ்சினியர்கள் பெரும் வருமானத்தை விட பெருமளவில் சம்பாதிக்கும் வாய்ப்பு இந்த ஆர்கிடெக்ட் படிப்பவர்களுக்கு உண்டு என்றால் அது மிகை அல்ல. மேலும் இந்த படிப்பானது வேலை வாய்ப்பை வெளிநாடுகளில் பெருமளவில் பெற்றுத்தரும் ஒரு கல்வியாகும்.
ஜாதக ரீதியாக இந்த ஆர்கிடெக்ட் படிக்க வாய்ப்பு உள்ளதா என்று காண்பதே இந்த பதிவின் நோக்கமாகும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜாதகங்கள் இந்த ஆர்கிடெக்ட் படித்தவர்களின் சாதகமாகும். .
உதாரணம் : 1
ஜாதக ரீதியாக இந்த ஆர்கிடெக்ட் படிக்க வாய்ப்பு உள்ளதா என்று காண்பதே இந்த பதிவின் நோக்கமாகும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜாதகங்கள் இந்த ஆர்கிடெக்ட் படித்தவர்களின் சாதகமாகும். .
உதாரணம் : 1
மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த சாதகமானது ஒரு ஆர்கிடெக்ட் சாதகமாகும். இந்த ஜாதகத்தில் தொழில் காரகனான சனி பகவான் செவ்வாயுடன் சேர்ந்து லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் நிற்கிறது இதில் சனி பகவான் சத்திரனுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார். எனவே சனி வலுப் பெறுகிறார். அதுமட்டுமல்லாமல் கடக ராசியில் உள்ள சனி ஜலராசியில் உள்ளார். கடகம் நீர் ராசியாகும். எனவே இவர் கடல் கடந்து சென்று பணிபுரியும் வாய்ப்பைப் பெறுகிறார். மேலும் பரிவர்த்தனையில் கும்பத்திற்கு சனி செல்வது ஒரு நீர் ராசியாகும். எனவே இந்த இரண்டு ராசிகளின் படி இந்த ஜாதகர் வெளிநாடு செல்வது உறுதியாகிறது. இந்த சனியுடன் சேரும் செவ்வாயானவர் இந்த ஜாதகத்திற்கு லாபாதிபதியுமாகிறார். இந்த லாபாதிபதி தொழில் காரகனான சனியுடன் சேருவது தொழிலில் சிறப்பான இடத்தைக் கொடுக்கும். மேலும் கட்டிட கலைக்கு பூமி காரகனான செவ்வாய் சனியுடன் சேர வேண்டும் அல்லது பார்க்க வேண்டும். இங்கு சனி செவ்வாய் சேர்க்கையுடன் சனி பகவான் அதி பலம் பெற்றுள்ளார். எனவே இந்த ஜாதகர் கட்டிடக்கலை படிக்க வாய்ப்பு உண்டானது.
உதாரணம் 2:
இந்த ஜாதகத்தில் கட்டிடக் கலை படித்துள்ள இவருக்கு சனி பகவான் செவ்வாயுடன் சேரவில்லை. இருப்பினும் உயர் கல்வி ஸ்தானம் என்னும் ஒன்பதாமிடத்தில் செவ்வாய் உள்ளதால் கட்டிடக்கலை தொடர்பான படிப்பு அமைந்தது. ஆயினும் தொழில் காரகனான சனியுடனோ அல்லது தொழில் ஸ்தானாதிபதியான சந்திரனுடனோ இந்த செவ்வாய் தொடர்பு பெறவில்ல அதாவது இந்த கிரகங்கள் ஒன்று சேரவும் இல்லை. ஒன்றை ஒன்று பார்க்கவும் இல்லை. இது எதை குறிக்கிறது ? இந்த ஜாதகர் தொழில் கல்வி படித்தாலும் தான் படித்த படிப்பை விட்டு விட்டு பைனான்ஸ் தொழில் செய்கிறார். தொழில் காரகனான சனியுடன் செவ்வாய் சேர்ந்து இருப்பது இந்த நிலையை கொடுத்தது.மேலும் சனி நின்ற வீட்டு அதிபதி ஆட்சி பெறுவதால் இவர் ஈடுபட்டுள்ள தொழிலில் முதன்மையான நிலையை எட்ட முடிந்தது. கல்லூரியில் சேருவதற்கு முன்னமே இவருடைய தொழிலை ஜாதக ரீதியாக நிர்ணயித்து விட்டு பின்னர் படிப்பை தேர்ந்து எடுத்திருந்தால் எவ்வளவோ கால விரயம் பணவிரையத்தைத் தடுத்து இருக்கலாம்.
பொதுவாகவே பெற்றோர்கள் தனது குழந்தைகள் விரும்பும் படிப்பை படிக்க வைப்பதே சாலச் சிறந்ததாகும், பிரியம் இல்லாமல் அது இஞ்சினியர் படிப்பாக இருந்தாலும் படிக்க வைத்தால் அது அவருக்கு மட்டுமல்லாது பல பேருக்கும் பெரிய ரிஸ்க்காக ஆகிவிடும். எனவே பிள்ளைகளுக்கான கல்வி துறையை தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அவர்களது விருப்பம் மற்றும் நமது நிதி நிலைமை நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை சரியானதா என்ற ஜோதிட ரீதியான விபரம் ஆகியவற்றை சிந்தித்து தெரிந்தெடுத்தால் அவர்கள் வாழ்க்கை வளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ENGINEERS MAKE THE WORLD
No comments:
Post a Comment