காதல் கண்களை மறைக்கும் என்பது பழமொழி அதேபோல காமம் என்பது தனது நிலை மற்றும் குல பெருமை போன்றவற்றை மறக்க செய்யும் என்பது பலவகையிலும் நாமறிந்த ஒன்றே. இருப்பினும் இந்த உறவு சார்ந்த சிக்கல்களில் தவறு செய்பவர்கள் அது கணவனாயினும் அல்லது மனைவியாயினும் தவறு நடக்கும் வரை எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் ஒரு ஆர்வத்தினாலும் ஆசையினாலும் அளவு கடந்த விருப்பத்தினாலும் தங்களது பெருமை நிலை வசதி போன்ற எல்லாவற்றையும் மறந்து விடுகின்றனர். அனால் அந்த தவறு நடந்தபின் தங்களது உண்மை நிலை தெரியவரும்போது குறிப்பாக தவறுக்கு துணை செய்த தனது இனையாலோ அல்லது கணவர் / மனைவியாலோ தங்களது சந்தேக பார்வைக்கு ஆளாகும்போது அந்த சூழ்நிலையில் இருந்து தப்புவதற்கு செய்யும் முயற்சிகளின் போதோ அவர்கள் வடிக்கும் கண்ணீரும் படும் துயரமும் அளவிடற்கரியது. இந்த நிலை ஏன் ஏற்ப்படுகிறது ? இம்மாதிரியான உறவு சிக்கல்களில் மீண்டு வர முடியுமா ? என்பதை ஜோதிட ரீதியாக ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
பின்வரும் உதாரண ஜாதகத்தை பார்க்கவும். சிம்ம லக்னம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் கொண்ட இந்த சாதகமானது ஒரு பெண்மணியின் சாதகமாகும். இவர் ஒரு பொறுப்பான அரசு அதிகாரியாவார். இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர், ஆனால் தனது வயதைவிட குறைந்த வயதுடைய கல்வியறிவு இல்லாத ஓர் மெக்கானிக் வேலை செய்யும் ஒருவருடன் தொடர்பு ஏற்ப்பட்டு மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவு சென்றவர். ஏன் இந்த நிலைக்கு ஆளானார்.
சுக ஸ்தானம் எனப்படும் நான்காவது ராசியான விருச்சிகத்தில் சுக்கிரன் செவ்வாய் மற்றும் கேது பகவான் உள்ளனர். நான்காம் வீட்டில் உள்ள கேது தனது தாயாரின் உடல் நலனில் தொல்லை தரும் அமைப்பாகும். தயார் இல்லை என்னும் போது வீடு வாகனம் அல்லது தனது உடல் நலனில் பிரச்சனைகளை உருவாக்க வேண்டும். ஆனால் இவருடைய பதவி மற்றும் வருமானம் போன்றவற்றால் இருப்பிடமும் அதாவது வீடு மற்றும் வாகனம் போன்றவற்றில் சிறப்பான நிலையில் உள்ளார். தனது வயது மற்றும் வசதிகளால் உடல் ரீதியாக பெரிய தொல்லை என்று எதுவும் இல்லை. ஆனாலும் நான்காமிட கேதுவானவர் தனது பலன்களை கொடுக்க வேண்டுமல்லவா ? ஒரு பலூன் நிறைய தண்ணீரை நிரப்பி அதன் வாய்ப் பகுதியை கையில் பிடித்துக் கொண்டு தரையில் ஓங்கி அடித்தால் அதன் வாய் வழியாகத்தான் வெளியேற வேண்டும் என்பது இல்லை. எதன் வழியாகவும் வெளியேறலாம் அல்லவே அதைப் போல ஐந்தாமித்தில் ஆட்சியாக உள்ள செவ்வாய் சகல ஐஸ்வர்யத்தை கொடுத்தாலும் கேதுவானவர் உறவு சிக்கல்லை ஏற்ப்படுத்தி விடுகிறார்.
பொதுவாகவே கடக லக்னம் அல்லது சிம்ம லக்ன ஜாதகர்களுக்கு சனி பகவானானவர் மறைவிடத்தில் நின்றால் மட்டுமே சிறப்பான பலன்களை செய்வார். அவர் ஏழாமிடத்தில் ஆட்சியாகும் போது நிம்மதி அற்ற குடும்ப வாழ்க்கையை ஏற்ப்படுத்தி விடுகிறார். அதிலும் குறிப்பாக இந்த அமைப்பை பெற்றவர்கள் சனி திசையில் இருந்தால் நிச்சயமாக புயல் வீசும் குடும்ப அமைப்பை பெற்று விடுகின்றனர். இதன் காரணமாகவே இவர்கள் இது போன்ற உறவு சிக்கல்களில் சிக்கிக் கொள்ள காரணமாக அமைகிறது. இந்த உதாரண ஜாதகத்தில் ஏழாமிடத்தில் சனி பகவான் உள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
நாலமிட கேதுவானவர் மற்றும் காம காரகனான சுக்கிரன் சுகாதிபதியான செவ்வாய் சேர்க்கை தவறான வழிகளில் சுகத்தை தந்து விடுகிறார். இருப்பினும் லக்னாதிபதியான சூரியன் நீசம் பெற்று உள்ளது பலருக்கும் புத்தி சொல்லக் கூடிய நிலையில் இருந்தாலும் கௌரவ பங்கத்தை ஏற்ப்படுத்தி விடுகிறார். தனது தவறான உறவுக்காக சில பல லட்சங்களை செலவு செய்து மெக்கானிக்கை பொருளாதார ரீதியாக உயர்த்தி இருப்பினும் அவரிடம் யாருக்கும் தெரியாமல் தினமும் அடியும் உதையும் வாங்கும் நிலையில் இருந்து வருகிறார். தன்னை பார்த்து அனைவரும் எழுந்து நின்று மரியாதை தரத் தக்க நிலையில் இருந்தாலும் தன்னை விட வயதில் குறைந்தவனிடம் தனது கௌரவத்தை அடகு வைக்கும் நிலையில் இருப்பதற்கு லக்னாதிபதியான சூரியன் நீசம் பெற்று இருப்பது முக்கியமான காரணமாகும்.
தவறான வழிகளில் சுகத்தை தந்த கேது ஒரு விஷ கிரகம் என்பதால் ஒரு நிலையில் விஷத்தை குடித்து தற்கொலை செய்ய தூண்டியும் விடுகிறார். ஆனால் ஆயுள் காரகனான சனி பகவான் ஆட்சி பெற்று இருப்பது இவரின் ஆயுளை பறிக்க விடவில்லை.எனவே மனதளவில் நடை பிணமாக வலம் வரும் இவரின் வாழ்க்கை பரிதாபமான ஒன்றேயாகும்.