குரு பகவானின் ஸ்தலம் ஆலங்குடியாகும். குரு பகவான் சிவ பெருமானின் அம்சமானவர், சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டவர் என்பதும் உமையம்மை அந்த விஷத்தை தன்னுடைய கையால் இறைவனனின் கழுத்தில் வைத்து கண்டத்திலேயே அதாவது இறைவனின் கழுத்திலேயே விஷத்தை தங்க வைத்ததால் இறைவனின் கழுத்தானது நீல நிறமாக மாறிவிட்டது ஆகவே இறைவனுக்கு திரு நீலகண்டேஸ்வரர் என்ற திருநாமம் வந்தது என்பதும் பரம்பொருள் விடத்தை உண்ட நேரமே பிரதோஷ காலம் என்பதும் நாமறிந்த உண்மையாகும்.
ஆலகால விஷத்தை பருகிய சிவபெருமானின் அம்சமான குரு பகவானை தனது தமிழால் சொல்மாலை சூட்டும் கவி காளமேகம் தனக்கே உரிய நையாண்டியுடன் புனைந்துள்ள கவியானது இன்றும் படித்து இன்புறத் தக்கது.
" ஆலன்குடியான் " என்றால் ஆலங்குடியில் கோவில் கொண்டுள்ள இறைவா ! என்றும், ஆலகால விஷத்தை பருகாதவன் என்றும் இரு பொருள் பட தமிழ் விளையாடுகிறது காளமேகத்தின் நாவில். அதனால் தானோ என்னவோ கவிக்கொரு காளமேகம் என்று சொலவடை இன்றளவும் வழங்கி வருகிறது
காளமேகத்தில் கவிச்சுவையை இந்த ஒளிக்காட்சியில் ருசிக்கலாம்.
No comments:
Post a Comment