Sunday, June 26, 2016

கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு உள்ளதா ?





                    தொழில் கல்வி எனப்படும் டாக்டர் இஞ்சினீயர் தவிர கலைக்கல்வி எனப்படும் B.A., B.Sc., M.Sc., B.Com., M.Com., என்ற கல்விகள் எல்லாம் பெரும்பாலும் ஆசிரியர் பணிக்கே படிகின்றார்கள். இவர்களில் ஒரு சிலர் இம்மாதிரியான கல்வியை படித்தாலும் தனது படிப்புக்கும் தான் செய்யும் தொழிலுக்கும் சம்பந்தம் இல்லாமல் தொழில் செய்பவர்களே ஏராளமானோர் உள்ளனர். இருப்பினும் சிலருக்கு கல்வி என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. இந்த கல்வியானது துவக்கப் பள்ளியிலேயே முடிவடைந்து விடுவதும் உண்டு. ஆனால் ஒரு சிலருக்கோ இவை மேல்நிலை கல்வியுடன் முடிந்து விடுகிறது. இருப்பினும் வெகுசிலரே இளநிலைக் கல்வி மற்றும் முதுநிலைக் கல்வி என்ற இடத்தை நோக்கி நகருகின்றனர். இந்த நிலை எதனால் ஏற்ப்படுகிறது என்பதை ஆராய்வதே இதன் நோக்கமாகும். 

                 பொதுவாகவே தொழில் காரகன் என கூறப்படும் சனி பகவானுடன் புதன் சேரும் அல்லது பார்க்கும் நிலை ஏற்ப்பட்டால் அவர்களுக்கு சர்வ நிச்சயமாக கலை அறிவியல் கல்வி ஏற்ப்படுவதுடன் கல்வி நிறுவனங்களில் வேலை அமைவதும் அதாவது ஆசிரியராக அமர்வதும் பெரும்பாலும் நடக்கிறது. இதற்க்கு பல்வேறு உதாரண ஜாதகங்கள் இருந்தாலும் பின்வரும் இந்த ஜாதகத்தை கவனிக்கவும். 


                       இந்த ஜாதகத்தில் தொழில் காரகனான சனி பகவான் புதனுடன் கூடிஇருப்பது கலை அறிவியியல் தொடர்பான கல்வியை படிக்க வைத்தது என்பது   கவனிக்கத்தக்கது. இவருக்கு வாக்காதிபதி எனப்படும் சூரியன் குரு பகவானுடன் சேர்ந்து உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இவருடைய கல்வித்தகுதி M.Sc.,B.Ed., ஆகும். கல்விக்கு காரகனான புதன் பகவான் ரசாயன கிரகமான கேதுவுடனும் சனியுடனும் சேர்வது மட்டுமல்லாமல் ஜல கிரகம் எனப்படும் சந்திரனுடனும் சேர்க்கை பெற்றுள்ளார். இவரின் பட்டப்படிப்பு வேதியியல் பிரிவில் உயர் கல்வி பெற ஏதுவாகியது. 

திருச்சிற்றம்பலம் !!


No comments:

Post a Comment