Showing posts with label உங்களுக்கு டாக்டர் ஆகும் யோகம் உள்ளதா?. Show all posts
Showing posts with label உங்களுக்கு டாக்டர் ஆகும் யோகம் உள்ளதா?. Show all posts

Tuesday, January 10, 2012

உங்களுக்கு டாக்டர் ஆகும் யோகம் உள்ளதா?






 உங்களுக்கு டாக்டர் ஆகும் யோகம் உள்ளதா?   

                                 என்ன சொல்கிறது  உங்கள் ஜாதகம்?





     ஒருவர் இயல்பாக டாக்டர் படிப்பிற்கு படித்து பட்டம் பெற வேண்டுமானால் ,அவருடைய ஜாதகத்தில் மருத்துவ கிரகமான கேதுவும் ரத்ததிருக்கு காரகம் வகிக்கும் சந்திரன், அங்ககரன், சூரியன் போன்ற கிரகங்களும் சாதகமாக இருக்க வேண்டும் .

கேது ஜனன லக்னதிருக்கு 910 11 ல் இடம் பெற்று இருந்தாலும் விருச்சக ராசியில் உச்சம் பெற்றாலும் கடக ராசியில் உச்சம் பெற்று இருந்தாலும் அந்த ஜாதகற்கு மருத்துவ துறையில் வாய்ப்பு கிடைக்கும் .

  1. கேது உச்சமாகவும் சந்திரன் உச்சமாகவும் உள்ளவர்கள் சிறந்த மருத்துவர் ஆகலாம் 
          சூரியன் மேஷம் அல்லது விருச்கத்தில் இருக்க சந்திரன் சிம்மத்தில் நின்று பரிவர்தனையோகம் பெறலாம் அல்லது சூரியன் மிருகசீரிஷம் ,சித்திரை ,அவிட்டம் போன்ற சந்திரன் சாரம் பெற்றுள்ள நட்சத்திரத்தில் இருக்க சந்திரன் ,கிருத்திகை ,உத்திரம் ,உத்திராடம் ஆகிய சூரியனின் சாரம் பெற்றுள்ள நட்சத்திரத்தில் இருந்து சூரியனும் சந்திரனும் பரிவர்த்தனை பெற்றாலும் அந்த ஜாதகர் சிறப்பு மிக்க மருத்தவர் ஆகலாம்.