Saturday, October 6, 2012

சகுனம் என்பது உண்மையா ?


                                                                                

இதை பின்பற்றுவது நலம் பயக்குமா  ? 

               சகுனம் என்பது நமக்கு வரும் நல்ல பலன்களையோ அல்லது 

தீமையான பலன்களையோ முன்கூடியே அறிவிக்கும் ஒரு எச்சரிக்கை 

ஆகும். நாம் சகுனம் பார்த்தாலும் அல்லது பார்க்காவிட்டாலும் அது 

நடந்துகொண்டுதான் இருக்கும். சற்றே புத்தியை தீட்டி வைத்துக்கொண்டால் 

போதும் நடக்கப்போகும் நிகழ்வுகளின் முடிவுகளை தெளிவாக 

அறிந்துகொள்ளலாம். இது மூட நம்பிக்கை அல்ல மேலும் இந்த சகுனத்தை 

நமக்கு காட்டும் பொருட்டு வரும் மனிதர்களையோ அல்லது உயிர் 

பொருட்களையோ சபிப்பது அல்லது வாழ்த்துவது என்பது பொருத்தமற்றது, 

ஆனால் நம்மில் பலர் இதைதான் செய்துகொண்டுள்ளனர். காலையில் யார் 

முகத்தில் விழித்தேன் என்று தெரியவில்லை இன்று பூராம் இந்தப்பாடு 

படுகின்றேன். என்ற சொல் வழக்கே இதற்க்கு சான்றாகும். ஆனால் அவர்கள் 

நமக்கு நன்மையே செய்கிறார்கள் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. 

ஒரு காரியத்தை முன்னிட்டு நாம் வெளியே செல்லும்போது அந்த 

காரியமானது கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்துடனே 

செல்கிறோம் அவ்வாறு அந்த செயல் நடக்காமல் போனால் வருந்துவது 

அல்லது கோபப்படுவது என்று இரண்டு காரியங்கள் தான் மனித மனத்தால் 

நடத்த முடியும் என்பதே விதியாகும். நாம் ஒன்றும் முற்றும் துறந்த 

முனிவர்கள் அல்லவே, ஆசாபாசங்களுக்கு கட்டுப்பட்டு சம்சார பந்தம் 

என்னும் சாகரத்தில் உழன்று கொண்டுள்ள ஒரு சாதரணமான மனிதர்களுக்கு 

ஊனக்கன்களால் இந்த நிகழ்வை புரிந்துகொள்ளும் மனோ நிலை கிடையாது. 

தனது மகனின் தேர்வு முடிவை பார்க்க செல்லும் ஒரு தந்தைக்கு எதிர்வரும் 

ஒருவர்  அய்யா உங்கள் மகன் தேர்வில் முதல் மாணவனாக தேரிவிட்டான் 

என்ற ஒரு சொல்லானது "இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே " 

என்பதுபோல இருக்காதா ? அப்போது அவர் நாடி செல்லும் காரியமானது பாதி 

வழியே நிறைவேறிவிட்டது,  இந்த நிகழ்ச்சியானது எவ்வாறு அந்த தந்தைக்கு 

மகிழ்வை தந்ததோ அதே போல ஒரு கடினமான செயலானது நடக்க 

இருப்பதை சகுனமனது அறிவிக்கும் போதும் அதை ஏற்றுக்கொள்ளத்தானே 

வேண்டும். நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நடப்பது நடந்தே 

தீரும். அதன் விளைவுகள் சந்தித்தே ஆக வேண்டும். இந்த உண்மையானது 

நமக்கு விளங்கி விட்டால் போதுமானது. நமக்கு அறிவுறுத்தும் சகுன 

நபர்களை நாம் சபிக்கமாட்டோம் என்பதே உண்மை. இந்த செயல் வெற்றி 

பெரும் அல்லது வெற்றி பெறாது என்ற தகவலை நமக்கு முன்கூட்டியே 

தெரிவிக்கும் இவர்கள் நமக்கு நன்மையல்லவா செய்கிறார்கள். முறைப்படி 

நாம் அவர்களுக்கு நன்றியல்லவா சொல்ல வேண்டும். சகுனம் என்பது 

பொய்யானதாக இருக்கும் பட்சத்தில் இவ்வளவு காலம் வேத காலம் தொட்டு 

காலத்தை வென்று நிற்பது என்பது சாதாரணமானது அல்ல. பத்து வருடம் 

திரை உலகில் ஒளிரும் நட்சத்திரம் பின்வரும் காலங்களில் கால 

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு யார் என்றே தெரியாமல் போனதை 

கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரகாசமாக ஒளிரும் இவர்கள் எங்கோ 

சென்றுவிடுகிறார்கள். ஆனால் ஜோதிடமும் ஆன்மீகமும் காலத்தை 

கடந்ததும் நிற்கிறது என்றால் அதில் விஷயம் உள்ளதால்தான் .

*******************************************************************************

No comments:

Post a Comment