இம்மை நலனளிக்கும் எச்சம் குறைபடுத்தும்,
அம்மை அருனரகத் தாழ்விக்கும் - மும்மை,
அரந்தேய்க்கும் செய்ய அலர்மகளும் நீக்கும்,
மறந்தேயும் பொய் ஒழுகும் வாய்.
தன்னை மறந்தேனும் பொய்யுரை ஒழுகும் வாயானது,
இந்த உலகிலிருந்து பெரும் புகழையும் இன்பத்தையும் அழிக்கும்.
மேலும் தன எச்சமாகிய மக்கட்பேரினையும் பிறவற்றையும் குறைந்து
ஒழுகச்செயும். மறுமை உலகத்து சென்ற காலை கொடிய நரகில்
ஆழ்த்திவிடும். முற்பிறப்பில் செய்த நல்வினையையும் புண்ணியங்களையும்
தேய்த்து விடும். ( எக்காலத்தும் பொய் உரைத்தல் பாபமாகும் ) என்ற இலக்கிய
வரிகள் சொல்வதை எடுத்துக்கொண்டாலும், வள்ளுவ பெருந்தகை
கொடுத்துள்ள பின்வரும் வரிகளில் உள்ள முரண்பாட்டை எவ்வாறு
எடுத்துக்கொள்வது
பொய்மையும் வாய்மை இடத்தே புரைதீர்க்கும்,
நன்மை பயக்கு மெனின்.
என்ற வள்ளுவரின் குறளையும் இங்கு ஈண்டு நோக்கத்தக்கது.
No comments:
Post a Comment