Friday, February 28, 2014

இரண்டு மனைவிகள் அமையும் யோகம் யாருக்கு உள்ளது ?

                                                                                 

                                            சாதரணமாக இரண்டு மனைவி யோகம் என்பது எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் இந்த யோகத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். இதற்க்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.


             பொதுவாகவே இரண்டாமிடம் அல்லது ஏழாமிடத்தில் பாவ கிரகங்கள் இருப்பது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்புடையது அல்ல என்பது நம்மில் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.  இரண்டு மனைவி என்பதை எளிதாக காண இரண்டாமிடத்தில் ராகு பகவான் தனிமையில் இருந்து திசை நடத்தினால் அவருக்கு உறுதியாக இரு தாரம் அமைய வாய்ப்பு நூறு சதவிகிதம் உள்ளது. அதேபோல ராகு பகவான் மூன்றாமிடத்தில் தனிமையில் இருந்து திசை நடத்தினால் அவர்களுக்கு குடும்ப வாழ்க்கை பெரும் போராட்டமாகவோ அல்லது உத்தியோகத்தின் நிமித்தம் கணவன் மனைவி இருவரும் தனி தனியே பிரிந்து வாழ்வதை அறுதியிட்டுக் கூறலாம்.

                    பின்வரும் இந்த உதாரண ஜாதகத்தைப் பார்க்கவும். இந்த ஜாதகத்தில் இரண்டாமிடமான கடகத்தில் இரண்டு பாவ கிரகங்கள் அமைந்துள்ளது, கேது பகவான் மற்றும் செவ்வாய் உள்ளது இந்த ஜாதகர் தனது முதல் மனைவி மூன்று குழந்தைகளுடன் இருக்கும்போதே இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தையுடன் உள்ள  கைம் பெண்ணை  திருமணம் செய்துகொண்டார். இதற்க்கு என்ன காரணம் இருக்க முடியும். இரண்டாமிடத்ததிபதி ரூன ரோக சத்ரு ஸ்தானமான ஆறமிடத்து  அதிபதியான செவ்வாயுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது. இதனால் தனது முதல் மனைவியே இவருக்கு சத்ருவாகி காவல் துறை நீதிமன்றம் போன்ற நடவடிக்கைகளுக்கு காரண கர்த்தாவாகி விட்டார். ஆனாலும் பரிவர்த்தனை யோகத்தில் சந்திரன் ஆட்சியாவதால் திருமணமும் நடந்து மூன்று குழந்தைகளுக்கு தந்தையாகவும் ஆகிவிட்டார். இதற்க்கு புத்திர காரகன் குரு ஆட்சியாகி இருப்பதும் புத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சியாகி இருப்பதும் சாதகமான சூழ்நிலையாகும். ஆயினும் இரண்டாமிடத்தில் உள்ள கேதுவும் இரண்டாம் அதிபதி சந்திரன் ஆறாமிடத்தில் இருப்பதும் இவருக்கு மனைவியே எதிரியாகவும் மாறுவதற்கு எதுவாக அமைந்தது. இது மட்டுமல்லாமல் இவருக்கு மிதுனம் உபய லக்னமாகும். உபய லக்னத்திற்கு  எழாமதிபதி பாதகதிபதியாகும்.இந்த எழாமிடத்து அதிபதி குரு பகவான் ஆட்சி பெற்று நிர்ப்பது மிக பாதகமான அமைப்பாகும். ஆக்சன் தான் நன்றாக இருக்குமே தவிர ஓவர் ஆக்சன்  நன்றாக இருக்காது. இங்கு குரு பகவான் ஆட்சி பெறுவது பாதகமான பலன்களையே செய்வார். அதிலும் குறிப்பாக ஏழாமிடமான மனைவி வழியாகவே அனைத்து சோதனைகளையும் கொடுப்பார் என்பதே விதியாகும். இதன் காரணமாகவே நீதிமன்றத்தின் நெடிய படிகளில் இந்த குடும்பத்தை ஏற வைத்து விட்டது. பதினொன்றாமிடத்து அதிபதியான செவ்வாய் பரிவர்த்தனையில் ஆச்சியாவது மறு திருமணத்தை குறிக்கிறது. இந்த செவ்வாய் கேதுவுடன் இணைவது கைம் பெண்ணை மறுமணம் செய்வதை குறிக்கிறது.  அதுவும் ஒரு காதல் திருமணமாகவே அமைந்தது, இந்த திருமணத்தில் இந்த ஜாதகருக்கு கிடைத்த மன நிம்மதி என்பது அளவுகடந்தது. அந்த அளவுக்கு இரண்டாமிட கேது செவ்வாய் மற்றும் ஏழாமிட தனித்த குரு இந்த ஜாதகரை மிக வலுவாக சிரமப்படுத்திவிட்டார் என்றால் அது மிகையல்ல. உபய லக்னத்திற்கு  ஏழாமிடத்தில் பாதகாதிபதி வலு பெறுவது என்பது இருதார யோகத்தையே குறிக்கிறது. இதேபோல மீனம் மற்றும் தனுசு லக்னத்திற்கும் இவை இரண்டும் உபய லக்னமாகும், புதன் ஏழாமிடத்தில் ஆட்சி பெறுவது இருதார யோகத்தையே குறிக்கிறது.




ஓம் நமோ நாராயணாய நமஹ !!

Saturday, February 1, 2014

சகோதரன் இல்லாமல் இருப்பது எதனால் ?



                          சிலருக்கு சகோதரன் இல்லாமல் பெண் குழந்தைகள் மட்டும் இருப்பதன் காரணம் என்ன ? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். ஜாதக கட்டத்தில் சகோதர காரகன் என்பது செவ்வாயைக் குறிக்கும், அதே போல சகோதர ஸ்தானம் என்பது மூத்தோருக்கு பதினொன்றாம் இடமும் இளைய சகோதரத்திற்கு மூன்றாம் இடத்தையும் குறிக்கும். இதில் செவ்வாய் இருந்ததால் சகோதரன் இருப்பது இல்லை. இதில் மூன்றாமிடத்தில் செவ்வாய் இருந்தால் இளைய சகோதரன் வாய்ப்பது  இல்லை.அதேபோல பதினொன்றாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் மூத்த சகோதரன் இருப்பது இல்லை. அதையும் மீறி சகோதரன் இருந்தால் அவர்களும் சிரமப்பட்டு இருப்பவர்களையும் சிரமத்தில் கொண்டு விட்டுவிடுகிறார்கள்

                          பிருகு சூத்திரத்தில் சொன்னபடி " காரக கிரகம் காரக ஸ்தானத்தில் நிற்பது தவறு " என்ற விதியோடு ஒத்து போகிறது. இதையே ஜாதக அலங்காரத்தில்

                 "  சோதர காரகன் சோதர நாயகன் ற்றுட்ட
                          வட்டமங்கள் கூடி நிற்க சோதரம் சொப்பனம் கிட்டாதே.  "


                        என்று கூறுகிறது, சகோதர ஸ்தானதிபதியும் ( மூன்றாமிடத்ததிபதி அல்லது பதினொன்றாம் வீட்டதிபதியும் )  சகோதர காரகனான செவ்வாயும் ஆறு எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் நின்றால் அந்த ஜாதகர்களுக்கு சகோதரன் என்பது கனவிலும் கிட்டாது என்று உறுதியாக கூறுகிறது.

                                         பின்வரும் உதாரண ஜாதகத்தில் ஒரு மூத்த சகோதரன் இருந்து தனது பதிமூன்றாம் அகவையில் இறைவனடி சேர்ந்துவிட்டார்.  இந்த ஜாதகத்தில் பன்னிரெண்டாம் வீட்டில் மூத்த சகோதர ஸ்தான அதிபதியான சந்திரனுடன் சகோதர காரகன் செவ்வாய் சேர்ந்து விரைய ஸ்தானம் என்னும் பன்னிரெண்டாமிடமான சிம்மத்தில் மறைந்து உள்ளது. இதனால் ஏற்ப்பட்ட சகோதர தோஷமே தனது அண்ணனை இழக்க நேரிட்டது.