Saturday, October 6, 2012

சகுனம் என்பது உண்மையா ?


                                                                                

இதை பின்பற்றுவது நலம் பயக்குமா  ? 

               சகுனம் என்பது நமக்கு வரும் நல்ல பலன்களையோ அல்லது 

தீமையான பலன்களையோ முன்கூடியே அறிவிக்கும் ஒரு எச்சரிக்கை 

ஆகும். நாம் சகுனம் பார்த்தாலும் அல்லது பார்க்காவிட்டாலும் அது 

நடந்துகொண்டுதான் இருக்கும். சற்றே புத்தியை தீட்டி வைத்துக்கொண்டால் 

போதும் நடக்கப்போகும் நிகழ்வுகளின் முடிவுகளை தெளிவாக 

அறிந்துகொள்ளலாம். இது மூட நம்பிக்கை அல்ல மேலும் இந்த சகுனத்தை 

நமக்கு காட்டும் பொருட்டு வரும் மனிதர்களையோ அல்லது உயிர் 

பொருட்களையோ சபிப்பது அல்லது வாழ்த்துவது என்பது பொருத்தமற்றது, 

ஆனால் நம்மில் பலர் இதைதான் செய்துகொண்டுள்ளனர். காலையில் யார் 

முகத்தில் விழித்தேன் என்று தெரியவில்லை இன்று பூராம் இந்தப்பாடு 

படுகின்றேன். என்ற சொல் வழக்கே இதற்க்கு சான்றாகும். ஆனால் அவர்கள் 

நமக்கு நன்மையே செய்கிறார்கள் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. 

ஒரு காரியத்தை முன்னிட்டு நாம் வெளியே செல்லும்போது அந்த 

காரியமானது கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்துடனே 

செல்கிறோம் அவ்வாறு அந்த செயல் நடக்காமல் போனால் வருந்துவது 

அல்லது கோபப்படுவது என்று இரண்டு காரியங்கள் தான் மனித மனத்தால் 

நடத்த முடியும் என்பதே விதியாகும். நாம் ஒன்றும் முற்றும் துறந்த 

முனிவர்கள் அல்லவே, ஆசாபாசங்களுக்கு கட்டுப்பட்டு சம்சார பந்தம் 

என்னும் சாகரத்தில் உழன்று கொண்டுள்ள ஒரு சாதரணமான மனிதர்களுக்கு 

ஊனக்கன்களால் இந்த நிகழ்வை புரிந்துகொள்ளும் மனோ நிலை கிடையாது. 

தனது மகனின் தேர்வு முடிவை பார்க்க செல்லும் ஒரு தந்தைக்கு எதிர்வரும் 

ஒருவர்  அய்யா உங்கள் மகன் தேர்வில் முதல் மாணவனாக தேரிவிட்டான் 

என்ற ஒரு சொல்லானது "இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே " 

என்பதுபோல இருக்காதா ? அப்போது அவர் நாடி செல்லும் காரியமானது பாதி 

வழியே நிறைவேறிவிட்டது,  இந்த நிகழ்ச்சியானது எவ்வாறு அந்த தந்தைக்கு 

மகிழ்வை தந்ததோ அதே போல ஒரு கடினமான செயலானது நடக்க 

இருப்பதை சகுனமனது அறிவிக்கும் போதும் அதை ஏற்றுக்கொள்ளத்தானே 

வேண்டும். நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் நடப்பது நடந்தே 

தீரும். அதன் விளைவுகள் சந்தித்தே ஆக வேண்டும். இந்த உண்மையானது 

நமக்கு விளங்கி விட்டால் போதுமானது. நமக்கு அறிவுறுத்தும் சகுன 

நபர்களை நாம் சபிக்கமாட்டோம் என்பதே உண்மை. இந்த செயல் வெற்றி 

பெரும் அல்லது வெற்றி பெறாது என்ற தகவலை நமக்கு முன்கூட்டியே 

தெரிவிக்கும் இவர்கள் நமக்கு நன்மையல்லவா செய்கிறார்கள். முறைப்படி 

நாம் அவர்களுக்கு நன்றியல்லவா சொல்ல வேண்டும். சகுனம் என்பது 

பொய்யானதாக இருக்கும் பட்சத்தில் இவ்வளவு காலம் வேத காலம் தொட்டு 

காலத்தை வென்று நிற்பது என்பது சாதாரணமானது அல்ல. பத்து வருடம் 

திரை உலகில் ஒளிரும் நட்சத்திரம் பின்வரும் காலங்களில் கால 

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு யார் என்றே தெரியாமல் போனதை 

கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரகாசமாக ஒளிரும் இவர்கள் எங்கோ 

சென்றுவிடுகிறார்கள். ஆனால் ஜோதிடமும் ஆன்மீகமும் காலத்தை 

கடந்ததும் நிற்கிறது என்றால் அதில் விஷயம் உள்ளதால்தான் .

*******************************************************************************

ஆடி மாதம் புதிதாக திருமணம் ஆன தம்பதியரை பிரித்து வைக்க வேண்டுமா ?

                                                                         


                      ஆடி மாதம் தம்பதியர் ஒன்றாக இருந்து கற்பமுண்டானால் 

பிரசவம் சித்திரை மாதம் வரும். சித்திரைக்கு அப்பன் தெருவில் நிற்பான் 

என்பது பழமொழியாகும். சூரியன் உச்சம் பெரும் மாதம் சித்திரை மாதம் 

ஆகும். சூரியன் உச்ச காலத்தில் தன்னுடைய முழு கிரணங்களையும் பூமி மீது 

வலிமையாக செலுத்தும். இதனால் அல்ட்ரா வயலெட் கதிர்கள் தாக்கம் மிக 

அதிக அளவில் இருக்கும். எனவே இது குழந்தைகளுக்கு உகந்தது அல்ல. 

இக்கதிர்கள் இளம் சிசுக்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் 

இக்காலங்களில் பிரசவம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். பொதுவாகவே 

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றால் அவர் மிகுந்த மன 

வலிமை உள்ளவராக இருப்பர். யாருக்கும் அடிபணிய மறுப்பர், தான் 

சொல்வதே சரி என்னும் மனோநிலையானது இருக்கும். இதே சூரியன் 

ஆறாமிடதிலோ அல்லது எட்டாமிடதிலோ  உச்சமானால் அவர்கள் அரசாங்க 

விரோதமான அல்லது சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்ய சிறிதும் 

அஞ்சமாட்டார்கள். இதுவே ஜெயில் கிரகம் எனப்படும். இந்த சூரியன் உச்சம் 

பெறுவதோடு ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து ஆறாமிடம் அல்லது 

எட்டாமிடத்தில் இருந்து விட்டால் அந்த சாதகனின் தந்தை ஆயுளையே 

குறைத்துவிடும். எனவே தான் ஆடியில் பிரித்துவைக்கும் ஒரு முறையை 

தமிழன் கண்டு பிடித்தான். இதை வேத காலம் தொட்டு 

பின்பற்றிவருகின்றோம். ஆனால் அப்போது இருந்ததை விட தற்காலத்தில் 

ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டதால் தற்போது அல்ட்ரா 

வயலெட் கதிர்கள் தாக்கம் அதிகமாக உள்ளது என்பது நவீன அறிவியலின் 

முடிவாகும். இதைதான் வேத காலங்களிலேயே ஞான திருஷ்டியால் 

கண்டுபிடித்து சொல்லி வைத்தார்கள். இந்த தாத்பர்யம் புரியாததால் நமக்கு 

இது மூட நம்பிக்கையாக தெரிகிறது. ஆகவே ஆடியில் பிரிந்திருப்பது என்பது 

அவசியமானது. !!

*****************************************************************************

தலைச்சன் பையனுக்கும் தலைச்சன் பொண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்பது உண்மையா                      தலைச்சன் பையனுக்கும் தலைச்சன் பொண்ணுக்கும் ஆணி மாதம் 

தவிர பிற மாதங்களில் தாராளமாக திருமணம் செய்யலாம். இது எல்லா 

பஞ்சங்கங்களிலும் இருக்கும் . இதை த்ரிஜேஷ்டை  என்பர், ஆனி மாதம்  தவிர 

மற்ற மாதங்களில் திருமணம் செய்யலாம். 

********************************************************************************

மனைவிமீது அதிகபிரியம் கொண்டவராக இருக்கக் காரணம் என்ன ?                                                                            

                                          ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாமிடம் என்னும் களத்திர 

ஸ்தானத்தில் சுக்கிரனும் சனியும் சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகர் கணவன் 

ஆனால் மனைவி மீதும் மனைவியானால் கணவன் மீதும் அதிக பிரியம் 

கொண்டவர்களாக இருப்பர். இது மிக நுணுக்கமாக காணவேண்டிய ஒரு 

விஷயமாகும். எவ்வாறெனில் எழாமிடத்தில் சனி தனித்து இருந்தால் அந்த 

ஜாதகர்களுக்கு திருமணம் நடைபெறுவதே மிக கடினமாகும். அதே 

சமையத்தில் எழாமிடத்தில் சுக்கிரன் மட்டும் தனித்து இருந்தால் அது காரகோ 

பாவ நாஸ்தி என்று பிருகு சூத்திரம் கூறியபடி குடும்ப வாழ்கை மிக 

சிரமமானதாக இருக்கும். ஆனால் இந்த சனி பகவானும் சுக்கிரனும் ஒன்று 

சேர்ந்து எழாமிடத்தில் நின்றால் அது யோகமாக மாறிவிடுகின்றது. எதிர் 

எதிரான செயல்பாடுகளைக் கொண்ட இரு துருவங்களாக உள்ள இந்த 

இரண்டு கிரகங்களும் ஒன்று சேரும்போது அது மிக நல்ல பலன் தரும் கிரக 

நிலையாக மாறிவிடுகிறது. எவ்வாறு பாம்பின் விஷமானது உயிரையே 

போக்கும் என்றாலும் அதன் வீரியம் குறையும்போது அது உயிர் காக்கும் 

மருந்தாக மாரிவிடுகிறதோ அதுபோல இவ்விரு கிரகங்களும் ஏழாமிடத்தில் 

சேரும்போது நல்ல பலன்களையே தரும். இம்மாதிரியான கிரக 

அமைப்புகளை பெற்றவர்கள் குடும்ப வாழ்க்கையானது இனிமையாக 

செல்லும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. இந்த அதீத அன்பினால்தான் 

சிலர் மனைவிக்கு சமைதுப்போடுதல் அல்லது துவைத்துப் போடுதல் வீடு 

வாசல் பெருக்குதல் போன்ற வேலைகளை செய்கிறார்கள். இம்மாதிரியான 

வேலைகள் அவர்களுக்கு சுமையாக இருப்பதற்கு பதிலாக சுகமாக 

செய்கிறார்கள். 

*********************************************************************************

அமைதியான குடும்ப வாழ்க்கையா ? போராட்டமான குடும்பமா ?

                                                                                                   லக்னத்திற்கு ஏழாவது வீட்டில் சுக்கிரன், செவ்வாய் இணைந்து 

இருந்தாலோ அல்லது சனி, செவ்வாய் இணைந்து இருந்தாலோ இதே கிரக 

சேர்க்கை இரண்டாமிடத்தில் இருந்தாலோ அந்த வாழ்க்கை 

போராட்டமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ஏழாவது 

வீட்டில் செவ்வாய் இருந்து அவருடைய திசை நடக்கும் காலம் அது ஆணாக 

இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை நிச்சயமாக 

திசை மாறி செல்லும் என்பது ஜோதிட கிரந்தங்கள் அறுதியிட்டுக் கூறும் 

உண்மையாகும். இம்மாதிரியான ஜாதகன்களே நீதிமன்றத்தின் நெடிய 

படிக்கட்டுக்களில் ஏறவேண்டிய நிலை உறுதியாக ஏற்படும். இவர்களுக்கு மறு 

திருமணம் மன அமைதியுடனும் நிம்மதியாகவும் ஏற்படும். 

                         

ஏழாவது வீட்டில் சனி நின்றால் திருமண தடை ஏற்படுமா ?

                                                       
                        ஏழாவது வீட்டில் சனி நிற்பது திருமணத்தை தாமதப்படுத்தும்,

ஆனால் திருமண தடையாக இருக்காது. பன்னிரண்டு ராசிக் கட்டத்தையும்

ஒரு சுற்று சுற்றிவர சந்திரன் எடுத்துக்கொள்ளும் காலமானது சுமார் ஒரு

மாதமாகும், அதே சுற்றுப்பாதையை சூரியன் சுற்றிவர எடுத்துக்கொள்ளும்

கால அளவானது சுமார் ஒரு வருடமாகும், குரு பகவான் ஒரு சுற்றுக்கு

எடுத்துகொள்ளும் காலமானது சுமார் பன்னிரண்டு வருடங்களாகும், ஆனால்

சனி பகவானோ இதற்க்கு எடுத்துக்கொள்ளும் கால அளவானது சுமார் முப்பது

வருடங்களாகும். அறிவியல் ரீதியாக இதற்க்கு காரணம் சனி பகவான்

சூரியனிடமிருந்து மிக தொலைவில் இருப்பதால் அதனுடைய சுற்றுப்பாதை

மிக நீளமானதாகும். ஜோதிட ரீதியாக சனி பகவான் ஒரு ராசிக்கு இரண்டரை 

ஆண்டுகாலம் சஞ்சாரம் செய்வதே காரணமாகும். சனீஸ்வர பகவான் ஏழாம் 

இடத்தை பார்த்தாலும் ஓரளவிற்கு திருமணம் தாமதமாகவே செய்யும் 

என்பதே விதியாகும். 

                             சனி மட்டுமே ஏழாவது வீட்டில் இருந்தால் திருமணம் மிக 

தாமதமாகுமே தவிர திருமணம் என்பது எட்டாக்கனி அல்ல. இறை அருளால் 

திருமணம் தாமதமானாலும் சிறப்பாகவே நடைபெறும். எத்தனையோ 

ஜாதகர்களுக்கு ஏழாவது வீட்டில் சனி இருந்தும் மிக சிறப்பான திருமண 

வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்களை எனது அனுபவத்திலேயே 

பார்த்திருக்கிறேன். இருப்பினும் திருமணமே நடக்க கூடாது என்றால் 

அவர்களுக்கு லக்னத்திற்கு இரண்டாம் இடத்து அதிபதியான குடும்பாதிபதியும் 

ஏழாம் வீட்டு அதிபதியான களத்திராதிபதியும் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் 

வீடுகளில் மறைந்திருந்தால் இம்மாதிரியான ஜாதகர்களுக்கு உறுதியாக 

திருமணம் என்பது இல்லை என்று கூறிவிடலாம் ஆனால் சனி 

ஏழில்இருந்தால் திருமணம் ஆகாது என்பது " வெள்ளையாக இருந்தால் பால் "

என்பது போன்றதாகும். எனவே சனி பகவான் எழாமிடத்தில் இருந்தாலும் 

அவர்களுக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 

அமைதியான திருமண வாழ்க்கை அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

                        நமது நேயர்களுடைய மிக பெரிய கேள்வியே எழில் சனி பகவான் 

இல்லாவிட்டாலும் திருமண வாழ்க்கை என்பது மிக பெரிய போராட்டமாக 

இருப்பது ஏன் ? என்பதுதான். இதற்கான ஜாதக அமைப்பை அடுத்த பதிவில் 

காண்போம்.

Friday, October 5, 2012

உங்களின் முன்னோர் எந்த நிலையில் இருந்தவர் ?ஒருவரது ஜாதகத்தில் ராகுவும் சூரியனும் சேர்ந்து இருப்பின் அவரது தந்தை அரசியல் செல்வாக்கு உள்ளவரக இருப்பர் .ஜாதகனின் பாட்டனார் புகழ் உள்ளவராக இருப்பர் .ஆதிக்க குணம் உள்ளவராக இருந்திருப்பர் .

உங்களுக்கு ஜோதிடர் ஆகும் வாய்ப்பு உள்ளதா ?  உங்களது ஜாதகத்தில் சனியும் சந்திரனும் கூடி இருந்தால் நீங்கள் ஜோதிடர் ஆகும் வாய்ப்பு உள்ளது .மேலும் அன்மீக குரு ,மருந்து பொருள் விற்பனை ,கணக்காளர் தொழில் ஆகியவை சிறப்பாக இருக்கும் .

நீங்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்வீர்களா ?
மிகவும் அமைதியானவர்க இருப்பர் .உயர் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவுயம் பெற்று இருப்பர்.புகழ் பெற்ற மனிதராக வாழ்வார் .நேர்மையானவர்களாக திகழ்வார் .நிர்வாக பொறுப்பு ஏற்கும் நிலைக்கு உயர்வர் .தன் கடமைகளை சரிவர நிறை வேற்றவர் .குருவும் சனியும் சேர்ந்த அமைப்பை கொண்ட ஜாதகர்கள் இந்த நிலையை அடைவர் .மேலும் வாழ்கையில் எந்த கஷ்டமும் இல்லாமல் சுகபோகமாக வாழ்வார் .
                    


நீங்கள் எப்படிப்பட்ட மன நிலை உடையவர் ?


              ஒருவரது ஜாதகத்தில் குருவும் செய்வாய் யும் சேர்ந்து இருந்தால் அவர் மிகவும் கோப குணம் உள்ளவரக இருப்பர் .சிறு விசய திற்கு கூட மனம் சோம்பல் அடைந்து விடுவர்.உரக்கமாக பேசுபவர்களாக இருப்பர்.

நீங்கள் புகழ் பெற்றவரா?


               ஒருவரது ஜாதகத்தில் குருவும் சூரியனும் சேர்ந்து இருந்தால் ஜாதகர் நல்ல புகழ் பெற்றவராக இருப்பர் .கடவுள் பக்தி உள்ளவரக இருப்பர்.மேலும் இரக்க குணம் உள்ளவரக இருப்பர்.அவரின் புகழ் என்றும் நிலைத்து இருக்கும் .

     

Thursday, October 4, 2012

உடல் உழைப்பு இல்லாமல் சம்பாதிப்பவரா நீங்கள் ?

உங்கள் ஜாதக கட்டத்தில் புதன் உச்சமாக அல்லது ஆட்சியாக உள்ளதா ?
                     லக்னத்திற்கு கேந்திரம் எனப்படும் ஒன்று,நான்கு,ஏழு,பத்து ஆகிய கட்டங்களிலோ அல்லது ஒன்று ஐந்து,ஒன்பது ஆகிய திரி கோணங்களிலோ புதன் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால் அது பஞ்ச மகா புருஷ யோகம் எனப்படும் ஐந்து விதமான யோகங்களில் சிறப்பான ஒன்றாகும். இது  "பத்திர யோகம்" எனப்படும். இந்த பத்திர யோகம் இருந்தால் அவர்களுடைய அறிவுக் கூர்மை பளிச்சிடும். கல்வி கேள்விகளில் மிக சிறப்பாக விளங்குவர். இது மட்டுமன்றி இந்த ஜாதகர்களால் மாமன் மார்களுக்கும், மாமன் வர்க்கத்தாரால் இந்த ஜாதகர்க்கும் பரஸ்பரம் நல்ல உதவியும் வளமான உறவு நிலையும் அமையும் என்பது உறுதி !!  இந்த யோகம் பெற்ற சாதகர்கள் தங்களுடைய வாழ்க்கையில் புத்திசாலித்தனத்தால் மிகுந்த தான ப்ராப்தியை அடைவார் ! இதனால் இந்த சாதகர்கள் தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் உடல் உழைப்பு என்பதே இல்லாமல் பொருளாதாரத்தை ஈட்டுவர் என்றும் கூறப்படும். இம்மாதிரி சாதகர்கள் வங்கி, நிதி நிறுவனங்கள், கணக்கு தொடர்பான தொழில்களில் மிக சிறந்து விளங்குவர் என்பது உறுதி. மேலும் இவர்களின் பேச்சாற்றல் மற்றவரால் பிரமிக்க தக்க வகையில் அமையும், நகைச்சுவையாக பேசுவதிலும் வல்லவர்களாக இருப்பார்கள். குறிப்பாக லக்னத்தில் புதன் இருந்தால் அவர்கள் மார்கண்டேயன் மாதிரி என்றும் இளமையுடன் இருப்பார்கள். புகழ் பெற்ற பேச்சாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் புதன் வலுவாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

**********************************************************************************************************


                    

இளம் வயதிலேயே பெரும் செல்வத்தை சம்பாதிக்கக் கூடிய ஜாதகம்           .

              ஒரு சிலர் தனது ஓய்வு  காலம் வரை சம்பாதித்து விட்டு பின்னரே தனக்கென ஒரு வீடு வாசல் என்று வாழ்க்கையில் செட்டில் ஆகிறார்கள் ஆனால் வெகு சிலரே சிறிய வயதிலேயே மிகப் பெரும் செல்வாக்கினையும் செல்வத்தினையும் சம்பாதிக்கின்றனர். இது அவரவர்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய பூர்வ  புண்ணிய பலத்திலாலேயே நிகழ்கிறது என்றால் மிகையல்ல. இவ்வாறு சம்பாதிக்கும் வாய்ப்பு உங்கள் ஜாதகத்தில் உண்டா ? என்பதை பின்வரும் ஜோதிட பாடல் வழியாக அறிந்து கொள்ளலாம். இவர்கள் சம்பாதிக்கும் செல்வமானது தங்களது காலத்திற்கு  பின்னும் நிலைத்து நிற்கக்கூடிய பெரும் தனவந்தர்களாக    இருப்பார். வல்லான் வகுத்ததே வழி என்பர். இந்த கலியுகத்தில் தனம் படைத்தவனே வாழ்கையில் வெற்றி பெற்றவனாக கருதப்படுகின்றான் என்றால் பொருளாதாரத்தின் புண்ணியத்தை புரிந்து கொள்ளலாம்.

பொன்னவன் வெள்ளி பார்க்கில் புண்ணியன் இவர்கள் எல்லாம்,
பண்ணு கேந்திரத் திரிகோணம் பதியவே அநேகம் உள்ள,
வண்ண வாகனங்களுக்கு வரிசை மன்னவனாம் ராசா,
என்னலாம் இன்ன யோகம் இளமையில் விளங்குவானே.

              குரு, வெள்ளி ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி ஆகிய மூவரும் கேந்திர திரிகோண தானங்களில் அமர இளமயிலே பலவகையான வாகனங்களுக்கு அதிபதியாக அரசனைப்போல விளங்குவான்  என்று  கூறலாம்.

வீடு கட்டக் கூடாத மாதங்கள்               ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் வீடு கட்ட துவங்குவது தவறானதாகும். இந்த மாதங்களில் வீட்டு வேலை துவங்கினால் அது இடையிலேயே நின்றுவிடும் என்பது சுருதியாகும்.  இதனை பின்வரும் ஜோதிட பாடலால் அறியலாம். 

                                           கூனி ஆனி புரட்டாசி மார்கழி 
                                           ஊனமானவை நான்கு மாதமும்,
                                           மானியான மனைதான் குடிபுகில் 
                                           ஈனமாய் இடர் செய்யும் நோய்களே.

            இந்த மாதங்களில் வீடு கட்ட கடைக்கால் தோண்டுவது மற்றும் புது மனை குடி புகுவது ஆகாததாகும். எனவே இம்மாதங்களை தவிர்ப்பது நலம்.

Wednesday, October 3, 2012

உங்கள் ராசிக்கான நவரத்தினம் என்ன ? மேஷம்           -          பவளம் 

ரிஷபம்             -         வைரம் 

மிதுனம்           -          மரகத பச்சை 

கடகம்              -          முத்து 

சிம்மம்             -          மாணிக்கம் 

கன்னி              -          மரகத பச்சை 

துலாம்             -          வைரம் 

விருச்சகம்     -          பவளம்.

தனுசு                -         கனக புஷ்பராகம் 

மகரம்               -         நீலக்கல் 

கும்பம்             -         நீலக்கல் 

மீனம்               -         கனக புஷ்பராகம்.
தமிழ் மொழி இன்னும் செல்லவேண்டிய பாதை நெடியது !!


                ஒரு மனிதனிடம்  செல்வம் வந்தால் அவனுடைய பின்புலத்தில் உள்ள எல்லா தவறுகளையும் அது மறைத்துவிடும் என்பதை  வாழ்வியல் சார்ந்த தமிழ் இலக்கியம் எவ்வளவு இனிமையாக எடுத்தாள்கிறது இளம் வயதிலேயே பெரும் செல்வத்தை சம்பாதிக்கக் கூடிய ஜாதகம்.

                                                                                      

              ஒரு சிலர் தனது ஓய்வு  காலம் வரை சம்பாதித்து விட்டு பின்னரே தனக்கென ஒரு வீடு வாசல் என்று வாழ்க்கையில் செட்டில் ஆகிறார்கள் ஆனால் வெகு சிலரே சிறிய வயதிலேயே மிகப் பெரும் செல்வாக்கினையும் செல்வத்தினையும் சம்பாதிக்கின்றனர். இது அவரவர்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய பூர்வ  புண்ணிய பலத்திலாலேயே நிகழ்கிறது என்றால் மிகையல்ல. இவ்வாறு சம்பாதிக்கும் வாய்ப்பு உங்கள் ஜாதகத்தில் உண்டா ? என்பதை பின்வரும் ஜோதிட பாடல் வழியாக அறிந்து கொள்ளலாம். இவர்கள் சம்பாதிக்கும் செல்வமானது தங்களது காலத்திற்கு  பின்னும் நிலைத்து நிற்கக்கூடிய பெரும் தனவந்தர்களாக    இருப்பார். வல்லான் வகுத்ததே வழி என்பர். இந்த கலியுகத்தில் தனம் படைத்தவனே வாழ்கையில் வெற்றி பெற்றவனாக கருதப்படுகின்றான் என்றால் பொருளாதாரத்தின் புண்ணியத்தை புரிந்து கொள்ளலாம்.

                       பொன்னவன் வெள்ளி பார்க்கில் புண்ணியன் இவர்கள் எல்லாம்,
                       பண்ணு கேந்திரத் திரிகோணம் பதியவே அநேகம் உள்ள,
                       வண்ண வாகனங்களுக்கு வரிசை மன்னவனாம் ராசா,
                       என்னலாம் இன்ன யோகம் இளமையில் விளங்குவானே.

              குரு, வெள்ளி ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி ஆகிய மூவரும் கேந்திர திரிகோண தானங்களில் அமர இளமயிலே பலவகையான வாகனங்களுக்கு அதிபதியாக அரசனைப்போல விளங்குவான்  என்று  கூறலாம்.

               இம் மாதிரியான ஜாதகர்கள் தான் பின்னாளில் தோட்டம் தோப்பு துறவு என்று மிக பெரிய அளவில் வாழ்க்கையை வசதியாக அமைத்து கொள்கின்றனர். பல வகையான  தொழில் வாகன தொழில் போன்றவை இவர்களுக்கே அமைகின்றது, அதிர்ஷ்ட  இவர்கள் பக்கமே என்றும் நிற்கின்றாள் என்றால் அது மிக பொருத்தமாகும்.!!

உங்களது ஜாதகத்தில் வேசி யோகம் உள்ளதா ?


                                                                                                                                                                   


          ஒருவருடைய ஜாதக கட்டத்தில் சூரியனுக்கு இரண்டாம் இடத்தில் 

சந்திரன், ராகு, கேது தவிர மற்ற கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சனி 

போன்ற கிரகங்கள் தனியாகவோ அல்லது ஒன்றாகவோ இருந்தால் அது 

வேசி யோகம் எனப்படும். இந்த வேசி யோகம் பெற்ற சாதகர்கள் சத்ருஜெயம் 

எனப்படும் எதிரிகளை வெல்லுதல் மற்றும் தனது எதிரிகளாலே செல்வம் 

சேர்த்தல் போன்ற பலன்கள் ஏற்ப்படும். ஆனாலும் இவர்களுக்கு பெண்களால் 

பிரச்னை உண்டாகும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது எனவே இவர்கள் 

பெண்கள் மற்றும் அவர்கள் சம்பந்தமான விஷயங்களில் தலையை நீட்டாமல் 

இருப்பது சாலச் சிறந்தது. பிறரை கவர்ந்து இழுக்கக் கூடிய வசீகரமான 

முகமும், கலகலப்பாக பேசும் தன்மையும் மிகுந்து இருக்கும்.பெண்கள் 

இம்மாதிரியான ஆண்களை ஒருமுறை சந்தித்தாலே அவர்கள் பல காலம் 

நினைவை விட்டு அகலாமல் இருப்பார். இதே வேசி யோகமானது 

பெண்களுக்கு இருந்தால் அவர்கள் ஆண்வர்க்கதினரை கவர்ந்து இழுக்கக் 

கூடிய சக்தி படைத்தவர்களாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. 

இருப்பினும் இந்த வேசி யோகம் மட்டுமே ஒரு பெண்ணின் கற்ப்பு நிலையை 

நிர்ணயிப்பது  இல்லை. அதற்க்கு வேறு பல கிரக சேர்க்கையும் இருக்க 

வேண்டும். உதாரணமாக சுக்கிரன் மற்றும் செவ்வாய் கூடி ஏழாமிடத்தில் 

இருக்க பிறந்த ஜாதகர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் இந்த கிரக 

சேர்க்கையை குரு பார்க்காவிட்டால் நிச்சயமாக அவர்களுடைய கற்ப்பு 

என்பது கேள்விக்குறியே. அப்படியானால் இந்த வேசி யோகமானது எதை 

குறிக்கிறது என்றால் எதிர் பாலினத்தாரை கவர்ந்து இழுக்கும் பண்பையே 

குறிக்கும்.

பொய்யுரைத்தல் !!
                                        இம்மை நலனளிக்கும் எச்சம் குறைபடுத்தும்,

                                        அம்மை அருனரகத் தாழ்விக்கும் - மும்மை,

                                        அரந்தேய்க்கும் செய்ய அலர்மகளும் நீக்கும்,

                                        மறந்தேயும் பொய் ஒழுகும் வாய்.

              தன்னை மறந்தேனும் பொய்யுரை ஒழுகும் வாயானது, 

இந்த உலகிலிருந்து பெரும் புகழையும் இன்பத்தையும் அழிக்கும். 

மேலும் தன எச்சமாகிய மக்கட்பேரினையும் பிறவற்றையும் குறைந்து 

ஒழுகச்செயும். மறுமை உலகத்து சென்ற காலை கொடிய நரகில் 

ஆழ்த்திவிடும். முற்பிறப்பில் செய்த நல்வினையையும் புண்ணியங்களையும் 

தேய்த்து விடும்.  ( எக்காலத்தும் பொய் உரைத்தல் பாபமாகும் ) என்ற இலக்கிய 

வரிகள் சொல்வதை எடுத்துக்கொண்டாலும், வள்ளுவ பெருந்தகை 

கொடுத்துள்ள பின்வரும் வரிகளில் உள்ள முரண்பாட்டை எவ்வாறு 

எடுத்துக்கொள்வது 


                                 பொய்மையும் வாய்மை இடத்தே புரைதீர்க்கும்,
                                
                                 நன்மை பயக்கு மெனின்.

                என்ற வள்ளுவரின் குறளையும் இங்கு ஈண்டு நோக்கத்தக்கது.
கற்றோரை கற்றோரே காமுறுவர் !!

                                 காவே சிந்தாமணியே என்று வீணர் கடைத்தலை போய்,
                                 பாவே யுரைத்தும் பரிசளியார் நின் பதமுதவாய்,
                                 தேவே யசுரர் கிளையோடு மாளச் செகுன்தவை வெற,
                                 கோவே கதிரைப் பதிவாழ் குமர குருபரனே !!

                                கலைஞானமும், புலவர் சிறப்பும் அறியாத வீணர் தம் கடை வாயிலிற் போய்  " கற்பக சோலையே ! சிந்தாமணியே !! என்று இனிய பாக்களை பாடியுரைத்தாலும் சிறிதும் பரிசளித்து மகிழார், மாளக் கொன்ற கூறிய வேலாயுதத்தை உடைய, கதிர்காமத்தில் வாழும் குமர குருபரனே ! நின்பாதத்தில் வாழும் இன்பமாகிய பதத்தை எனக்கு அருள்வாயாக !!

Tuesday, October 2, 2012

உங்களுடைய ஜாதகத்தில் புதன் சனி கூடியுள்ளதா ?


                                                       

என்னுமால் சனியைக்கூடி இருந்திட மகவாய் வந்தோன்,
மண்ணுலகத்தில் பலபேரை மயக்கியே மோசம் செய்து ,
துன்னுமா பொருள்கை கொண்டே சுகமடைந்திடுவானாகும்,
உன்னத குருவின் வார்த்தை உட்கொள்ளான் கர்வியாமே.

                         புதன் சனி ஒன்று சேர்ந்து இருக்கையில் பிறந்தவன் உலகத்தில் உள்ள பல பேர்களையும் மயக்கி மோசம் செய்து அவர்கள் கையிலிருக்கிற பொருளை தான் கைகொள்வானாம். சுகமுள்ளவனாம். சமர்த்தன், குருமார்கள் வார்த்தையை தள்ளி தன மனம் போல நடப்பவன். கருவமுள்ளவனாய் இருப்பான் என்பதாம்.

Monday, October 1, 2012


கவி காளமேகம் இலக்கிய வளம் செறிந்த பாடல் 

                   வசையும் வசை மீட்சியும் ஒரே கவியில் புனைய முடியுமா ? என்பதற்கு ஒரு மிக சிறந்த எடுத்துக் காட்டு  கவி காளமேகம் பாடலே !!

                                                                             
பெண்களில் யாரை நம்பக்கூடாது 


                                 நமது தாயும் பெண்ணே தாரமும் பெண்ணே ! இருப்பினும் 

பெண்களை நம்பக்கூடாது என்று நமது தமிழ் இலக்கியம் 

எடுத்துக்காட்டுகிறது. அப்படியானால் எந்த மாதிரி பெண்களை நம்பக்கூடாது. 

"சேல் விழி அகற்றிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தயங்கி தவிப்பரே !"
 

                                                                                 
வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி எங்கே உள்ளது ?                     வாழ் நாள் முழுமையுமே நாம் தேடி  பிடித்து வாங்கும் 

பொருள்களாகட்டும், அல்லது நாம் அனுபவிக்கக்கூடிய  பொருட்களாகட்டும் 

எல்லாமே  மிக சிறப்பானதையே நமக்கு மன மகிழ்ச்சி அளிக்கக் 

கூடியவற்றையே தேர்ந்து எடுக்கின்றோம். ஆனாலும் நாம் அடைவதோ 

என்னமோ துன்பம்தான் அப்படியானால் உண்மையான மகிழ்ச்சி என்பதுதான் 

என்ன ? இந்த வீடியோவில் விடை கிடைக்கும் .                                                                            
ஜோதிடம் பார்த்துத்தான் திருமணம் செய்ய  


                                 வேண்டுமா ?                                             


                        இந்தியாவைப் பொருத்தவரை திருமணம் என்பது பெண்

 வீட்டாரோ அல்லது பிள்ளை வீட்டாரோ முடிவு செய்வது இல்லை. திருமணம்  

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதுன்றாலும் திருமணம் முடிவாவது 

ஜோதிடர் முடிவிலேயே இருக்கிறது, என்றால் அது மிகையல்ல.

                        பொருத்தம் பார்த்து செய்கின்ற எல்லா திருமணங்களும் 

வெற்றியடைந்து விடுகிறதா ? என்றால் இல்லை என்று தான் சொல்ல 

வேண்டும். அதே போல பொருத்தம் பாராமல் செய்கின்ற எல்லா 

திருமணங்களும் தோல்வியில் முடிகின்றதா என்றால் அதுவும் இல்லை 

என்றுதான் சொல்ல வேண்டும். 

                           பின்னர் எதற்காக பொருத்தம் பார்த்து திருமணம்  செய்கின்றனர் ? 

அப்படி என்னதான் பார்கிறார்கள் என்பதற்கான ஒளி பட  காட்சி விளக்கமே 

இதுவாகும்.                                                                

                       

வாழ்க்கையில் நிம்மதி அடைவது எவ்வாறு ?

    வாழ்க்கையில் நிம்மதி அடைவது எவ்வாறு ?