Tuesday, May 13, 2014

ஆலங்குடி குரு பகவான் - கவி காளமேகம் பார்வை

                                                                                   

குரு பகவானின் ஸ்தலம் ஆலங்குடியாகும். குரு பகவான் சிவ பெருமானின் அம்சமானவர், சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டவர் என்பதும் உமையம்மை அந்த விஷத்தை தன்னுடைய கையால் இறைவனனின் கழுத்தில் வைத்து கண்டத்திலேயே அதாவது இறைவனின் கழுத்திலேயே விஷத்தை தங்க வைத்ததால் இறைவனின் கழுத்தானது நீல நிறமாக மாறிவிட்டது ஆகவே இறைவனுக்கு திரு நீலகண்டேஸ்வரர் என்ற திருநாமம் வந்தது என்பதும் பரம்பொருள் விடத்தை உண்ட நேரமே பிரதோஷ காலம் என்பதும் நாமறிந்த உண்மையாகும். 

ஆலகால விஷத்தை பருகிய சிவபெருமானின் அம்சமான குரு பகவானை தனது தமிழால் சொல்மாலை சூட்டும் கவி காளமேகம் தனக்கே உரிய நையாண்டியுடன் புனைந்துள்ள கவியானது இன்றும் படித்து இன்புறத் தக்கது. 
" ஆலன்குடியான் " என்றால் ஆலங்குடியில் கோவில் கொண்டுள்ள இறைவா ! என்றும், ஆலகால விஷத்தை பருகாதவன் என்றும் இரு பொருள் பட தமிழ் விளையாடுகிறது காளமேகத்தின் நாவில். அதனால் தானோ என்னவோ கவிக்கொரு காளமேகம் என்று சொலவடை இன்றளவும் வழங்கி வருகிறது
காளமேகத்தில் கவிச்சுவையை இந்த ஒளிக்காட்சியில் ருசிக்கலாம்.

                                                                     

Thursday, May 8, 2014

பெண்களுக்கும் தார தோஷம் உண்டா ?

                                


                                      ஆண்களுக்கு திருமணம் ஆகவில்லையா ? அவருடைய ஜாதகத்தில் தார தோஷம் உள்ளது எனவே கால தாமதமாக திருமணம் செய்யுங்கள். அப்போது மறு திருமண யோகம் என்னும் இரண்டாவது விவாகத்தை தடுத்து விடலாம் என ஜோதிடர்கள் சொல்கின்றனர். இதே போல பெண்கள் ஜாதகத்திலும் திருமண தோஷம் இருக்குமா என்றால் நிச்சயமாக இருக்கும் என்று சொல்ல வழி உண்டு. பின்வரும் உதாரண ஜாதகத்தில் லக்னம் மேஷம் ராசி மிதுனம் இந்த ஜாதகத்தில் குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரனே எழாமிடத்து அதிபதியாகவும் வருவதோடு மட்டுமல்லாமல் களத்திர காரகனாகவும் உள்ளார். ஆக மூன்று வகையான முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த சுக்கிரன் உதாரண ஜாதகத்தில் நீசம் பெற்ற நிலையில் உள்ளார்.                                                      பெண்களின் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானம் என்பது எட்டாமிடமாகும். இந்த எட்டமிடத்தை சனீச்வர பகவான் தனது பத்தாம் பார்வையாக பார்கிறார். அதே இடத்தை செவ்வாய் தனது ஏழாம் பார்வையாக பார்கிறார். ஆக சனி மற்றும் செவ்வாயின் பார்வை ஒரு ராசியில் விழுமானால் அந்த இடமானது நசிந்துவிடும் என்பது ஜோதிட கூற்றாகும். இங்கு சனி செவ்வாய் பார்வை மாங்கல்ய ஸ்தானத்தில் விழுவதால் இந்த பெண்ணிற்கு இரண்டு முறை திருமணம் முடிந்து மூன்றாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டு உள்ளார்கள்.

                                                          எட்டாமிடம் என்பது ஆயுள் ஸ்தானமும் கூட இந்த பெண்ணிற்கு இள வயது என்பதால் ஆயுளில் தோஷம் ஏற்ப்படுத்தவில்லை.மாறாக இருமுறையும் மாங்கல்ய தோஷத்தை ஏற்ப்படுத்தி விட்டது. இந்த மாதிரியான ஜாதகங்கள் ஒரு நல்ல மாப்பிள்ளை ஜாதகத்திற்கு பொருத்தம் பார்க்க வந்தால் இது பொருத்தம் இல்லை என்று கூறும் நிலைக்கு ஜோதிடர்கள் வந்து விடுவர். ஆனால் பொருத்தம் பார்க்க வந்தவர்களோ நாங்கள் பார்த்த பக்கம் இந்த இரண்டு ஜாதகத்திற்கும் பொருத்தம் உள்ளது அதிலும் பத்து பொருத்தமும் உள்ளது எனவே நல்ல முறையில் திருமணம் செய்யலாம். என்று கூறுகின்றனர். இவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்பதே ஒரு கலையாகி விடுகிறது.

                                       
                                                                                             

Tuesday, May 6, 2014

கௌரவத்தை குலைக்கும் காமம்                       காதல் கண்களை மறைக்கும் என்பது பழமொழி அதேபோல காமம் என்பது தனது நிலை மற்றும் குல பெருமை போன்றவற்றை மறக்க செய்யும் என்பது பலவகையிலும் நாமறிந்த ஒன்றே. இருப்பினும் இந்த உறவு சார்ந்த சிக்கல்களில் தவறு செய்பவர்கள் அது கணவனாயினும் அல்லது மனைவியாயினும் தவறு நடக்கும் வரை எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் ஒரு ஆர்வத்தினாலும் ஆசையினாலும் அளவு கடந்த விருப்பத்தினாலும் தங்களது பெருமை நிலை வசதி போன்ற எல்லாவற்றையும் மறந்து விடுகின்றனர். அனால் அந்த தவறு நடந்தபின் தங்களது உண்மை நிலை தெரியவரும்போது குறிப்பாக தவறுக்கு துணை செய்த தனது இனையாலோ அல்லது கணவர் / மனைவியாலோ தங்களது சந்தேக பார்வைக்கு ஆளாகும்போது அந்த சூழ்நிலையில் இருந்து தப்புவதற்கு செய்யும் முயற்சிகளின் போதோ அவர்கள் வடிக்கும் கண்ணீரும் படும் துயரமும் அளவிடற்கரியது. இந்த நிலை ஏன்  ஏற்ப்படுகிறது ? இம்மாதிரியான உறவு சிக்கல்களில் மீண்டு வர முடியுமா ? என்பதை ஜோதிட ரீதியாக ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். 

                        பின்வரும் உதாரண ஜாதகத்தை பார்க்கவும். சிம்ம லக்னம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் கொண்ட இந்த சாதகமானது ஒரு பெண்மணியின் சாதகமாகும். இவர் ஒரு பொறுப்பான அரசு அதிகாரியாவார். இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர், ஆனால் தனது வயதைவிட குறைந்த வயதுடைய கல்வியறிவு இல்லாத ஓர் மெக்கானிக் வேலை செய்யும் ஒருவருடன் தொடர்பு ஏற்ப்பட்டு மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவு சென்றவர். ஏன்  இந்த நிலைக்கு ஆளானார். 


              சுக ஸ்தானம் எனப்படும் நான்காவது ராசியான விருச்சிகத்தில் சுக்கிரன் செவ்வாய் மற்றும் கேது பகவான் உள்ளனர். நான்காம் வீட்டில் உள்ள கேது தனது தாயாரின் உடல் நலனில் தொல்லை தரும் அமைப்பாகும். தயார் இல்லை என்னும் போது  வீடு வாகனம் அல்லது தனது உடல் நலனில் பிரச்சனைகளை உருவாக்க வேண்டும். ஆனால் இவருடைய பதவி மற்றும் வருமானம் போன்றவற்றால் இருப்பிடமும் அதாவது வீடு மற்றும் வாகனம் போன்றவற்றில் சிறப்பான நிலையில் உள்ளார். தனது வயது மற்றும் வசதிகளால் உடல் ரீதியாக பெரிய தொல்லை என்று எதுவும் இல்லை. ஆனாலும் நான்காமிட கேதுவானவர் தனது பலன்களை கொடுக்க வேண்டுமல்லவா ? ஒரு பலூன் நிறைய தண்ணீரை நிரப்பி அதன் வாய்ப் பகுதியை கையில் பிடித்துக் கொண்டு தரையில் ஓங்கி அடித்தால் அதன் வாய் வழியாகத்தான் வெளியேற வேண்டும் என்பது இல்லை. எதன்  வழியாகவும் வெளியேறலாம் அல்லவே அதைப் போல ஐந்தாமித்தில் ஆட்சியாக உள்ள செவ்வாய் சகல ஐஸ்வர்யத்தை கொடுத்தாலும் கேதுவானவர் உறவு சிக்கல்லை ஏற்ப்படுத்தி விடுகிறார். 

              பொதுவாகவே கடக லக்னம் அல்லது சிம்ம லக்ன ஜாதகர்களுக்கு சனி பகவானானவர் மறைவிடத்தில் நின்றால் மட்டுமே சிறப்பான பலன்களை செய்வார். அவர் ஏழாமிடத்தில் ஆட்சியாகும் போது நிம்மதி அற்ற குடும்ப வாழ்க்கையை ஏற்ப்படுத்தி விடுகிறார். அதிலும் குறிப்பாக இந்த அமைப்பை பெற்றவர்கள் சனி திசையில்  இருந்தால் நிச்சயமாக புயல் வீசும் குடும்ப அமைப்பை பெற்று விடுகின்றனர். இதன் காரணமாகவே இவர்கள் இது போன்ற உறவு சிக்கல்களில் சிக்கிக் கொள்ள காரணமாக அமைகிறது. இந்த உதாரண ஜாதகத்தில் ஏழாமிடத்தில் சனி பகவான் உள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. 

              நாலமிட கேதுவானவர் மற்றும் காம காரகனான சுக்கிரன் சுகாதிபதியான செவ்வாய் சேர்க்கை தவறான வழிகளில் சுகத்தை தந்து விடுகிறார். இருப்பினும் லக்னாதிபதியான சூரியன் நீசம் பெற்று உள்ளது பலருக்கும் புத்தி சொல்லக் கூடிய நிலையில் இருந்தாலும் கௌரவ பங்கத்தை ஏற்ப்படுத்தி விடுகிறார். தனது தவறான உறவுக்காக சில பல லட்சங்களை செலவு செய்து மெக்கானிக்கை பொருளாதார ரீதியாக உயர்த்தி இருப்பினும் அவரிடம் யாருக்கும் தெரியாமல் தினமும் அடியும் உதையும் வாங்கும் நிலையில் இருந்து வருகிறார். தன்னை பார்த்து அனைவரும் எழுந்து நின்று மரியாதை தரத் தக்க நிலையில் இருந்தாலும் தன்னை விட வயதில் குறைந்தவனிடம் தனது கௌரவத்தை அடகு வைக்கும் நிலையில் இருப்பதற்கு லக்னாதிபதியான சூரியன் நீசம் பெற்று இருப்பது  முக்கியமான காரணமாகும். 

                தவறான வழிகளில் சுகத்தை தந்த கேது ஒரு விஷ கிரகம் என்பதால்  ஒரு நிலையில் விஷத்தை குடித்து தற்கொலை செய்ய தூண்டியும் விடுகிறார். ஆனால் ஆயுள் காரகனான சனி பகவான் ஆட்சி பெற்று இருப்பது இவரின்  ஆயுளை பறிக்க விடவில்லை.எனவே மனதளவில் நடை பிணமாக வலம் வரும் இவரின் வாழ்க்கை பரிதாபமான ஒன்றேயாகும். Monday, May 5, 2014

பகட்டுக்கும் உடைக்கும் மட்டுமே மரியாதை !!

                                                                             


ஒரு மனிதனின் பெருமை புகழ் அவனுடைய அறிவு சார்ந்த விஷயம் மட்டுமே தவிர அவனுடைய தோற்றம் நடை உடை பாவனைகள் அல்ல என்பது நம்  எல்லோரும் அறிந்த விஷயமே என்றாலும் ஒருவருடைய தோற்றம் மிக சிறப்பாக இருந்தாலே நம்மையும் அறியாமல் அவர்மீது மதிப்பும் மரியாதையும் ஏற்ப்பட்டு விடுகிறது என்றால் அது மிகையல்ல. இருப்பினும் தோற்றம் மட்டுமே முழுமை அல்ல என்பது அறியத்தக்கது. சங்க காலம் தொட்டே தோற்றத்திற்கு மதிப்பு அளிக்கும் கலாச்சாரம் தொடர்ந்து நடந்து வந்துள்ளது என்பதற்கு ஆதாரமே இந்த தமிழ் புலவரின் கவியாகும். தனது வருத்தத்தையும் புலமை திறத்தால் எவ்வளவு அழகுபடுத்திச் சொல்கிறார் என்பது ரசிக்கத்தக்கது. 


Saturday, May 3, 2014

மணமுறிவு ( விவகாரத்து ) தவிர்க்க முடியுமா ?

 
                
                           விவகாரத்து என்பது தற்போது சாதாரணமாக ஆகிவிட்டதோ என்ற சந்தேகம் நம் அனைவருக்கும் உண்டு. காரணம் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் இந்த அளவு விவகாரத்து இருந்ததா என்றால் இல்லை என்பதே நிலையாகும். ஆனால் அன்று இருந்ததை விட வாழ்வியல் கல்வியாலும் வசதி வாய்ப்புகளும் உயர்ந்தே உள்ளன. அப்படியானால் நாம் முன்னேற்றப் பாதையில் அல்லவா செல்ல வேண்டும்.  எப்படி கல்வி தரம் வாழ்க்கைத் தரம் பொருளாதாரம் உயர்ந்து உள்ளதோ அதே போல விவகாரத்தும் உயர்ந்தே உள்ளது. இதற்க்கு என்ன காரணம் ? என்பதை ஆராய்வதே இந்த பதிவின் நோக்கமாகும். 

                    " கற்றலின் கேட்டல் நன்று " - என்ற முதுமொழிக்கேற்ப உதாரண ஜாதகத்திர்க்கான விளக்கத்தையும் மணமுறிவுக்கான காரணத்தையும் பின்வரும் ஒளிக்காட்சி மூலம் காணலாம்.