Friday, December 30, 2011

சகுனம் என்பது உண்மையா ? இதை பின்பற்றுவது நலம் பயக்குமா ?

ஆடி மாதம் புதிதாக திருமணம் ஆன தம்பதியரை பிரித்து வைக்க வேண்டுமா ?ஆடி மாதம் தம்பதியர் ஒன்றாக இருந்து கற்பமுண்டானால் பிரசவம் சித்திரை மாதம் வரும். சித்திரைக்கு அப்பன் தெருவில் நிற்பான் என்பது பழமொழியாகும். சூரியன் உச்சம் பெரும் மாதம் சித்திரை மாதம் ஆகும். சூரியன் உச்ச காலத்தில் தன்னுடைய முழு கிரணங்களையும் பூமி மீது வலிமையாக செலுத்தும். இதனால் அல்ட்ரா வயலெட் கதிர்கள் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கும். எனவே இது குழந்தைகளுக்கு உகந்தது அல்ல. இக்கதிர்கள் இளம் சிசுக்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் இக்காலங்களில் பிரசவம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். பொதுவாகவே ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றால் அவர் மிகுந்த மன வலிமை உள்ளவராக இருப்பர். யாருக்கும் அடிபணிய மறுப்பர், தான் சொல்வதே சரி என்னும் மனோநிலையானது இருக்கும். இதே சூரியன் ஆறாமிடதிலோ அல்லது எட்டாமிடதிலோ  உச்சமானால் அவர்கள் அரசாங்க விரோதமான அல்லது சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்ய சிறிதும் அஞ்சமாட்டார்கள். இதுவே ஜெயில் கிரகம் எனப்படும். இந்த சூரியன் உச்சம் பெறுவதோடு ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து ஆறாமிடம் அல்லது எட்டாமிடத்தில் இருந்து விட்டால் அந்த சாதகனின் தந்தை ஆயுளையே குறைத்துவிடும். எனவே தான் ஆடியில் பிரித்துவைக்கும் ஒரு முறையை தமிழன் கண்டு பிடித்தான். இதை வேத காலம் தொட்டு பின்பற்றிவருகின்றோம். ஆனால் அப்போது இருந்ததை விட தற்காலத்தில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டதால் தற்போது அல்ட்ரா வயலெட் கதிர்கள் தாக்கம் அதிகமாக உள்ளது என்பது நவீன அறிவியலின் முடிவாகும். இதைதான் வேத காலங்களிலேயே ஞான திருஷ்டியால் கண்டுபிடித்து சொல்லி வைத்தார்கள். இந்த தாத்பர்யம் புரியாததால் நமக்கு இது மூட நம்பிக்கையாக தெரிகிறது. ஆகவே ஆடியில் பிரிந்திருப்பது என்பது அவசியமானது.

தலைச்சன் பையனுக்கும் தலைச்சன் பொண்ணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்பது உண்மையா ?

                      தலைச்சன் பையனுக்கும் தலைச்சன் பொண்ணுக்கும் ஆணி மாதம் தவிர பிற மாதங்களில் தாராளமாக திருமணம் செய்யலாம். இது எல்லா பஞ்சங்கங்களிலும் இருக்கும்

ஒரு சிலர் மட்டும் மனைவிமீது அதிகபிரியம் கொண்டவராக இருக்கக் காரணம் என்ன ?

                               ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாமிடம் என்னும் களத்திர ஸ்தானத்தில் சுக்கிரனும் சனியும் சேர்ந்து இருந்தால் அந்த ஜாதகர் கணவன் ஆனால் மனைவி மீதும் மனைவியானால் கணவன் மீதும் அதிக பிரியம் கொண்டவர்களாக இருப்பர். இது மிக நுணுக்கமாக காணவேண்டிய ஒரு விஷயமாகும். எவ்வாறெனில் எழாமிடத்தில் சனி தனித்து இருந்தால் அந்த ஜாதகர்களுக்கு திருமணம் நடைபெறுவதே மிக கடினமாகும். அதே சமையத்தில் எழாமிடத்தில் சுக்கிரன் மட்டும் தனித்து இருந்தால் அது காரகோ பாவ நாஸ்தி என்று பிருகு சூத்திரம் கூறியபடி குடும்ப வாழ்கை மிக சிரமமானதாக இருக்கும். ஆனால் இந்த சனி பகவானும் சுக்கிரனும் ஒன்று சேர்ந்து எழாமிடத்தில் நின்றால் அது யோகமாக மாறிவிடுகின்றது. எதிர் எதிரான செயல்பாடுகளைக் கொண்ட இரு துருவங்களாக உள்ள இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேரும்போது அது மிக நல்ல பலன் தரும் கிரக நிலையாக மாறிவிடுகிறது. எவ்வாறு பாம்பின் விஷமானது உயிரையே போக்கும் என்றாலும் அதன் வீரியம் குறையும்போது அது உயிர் காக்கும் மருந்தாக மாரிவிடுகிறதோ அதுபோல இவ்விரு கிரகங்களும் ஏழாமிடத்தில் சேரும்போது நல்ல பலன்களையே தரும். இம்மாதிரியான கிரக அமைப்புகளை பெற்றவர்கள் குடும்ப வாழ்க்கையானது இனிமையாக செல்லும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. இந்த அதீத அன்பினால்தான் சிலர் மனைவிக்கு சமைதுப்போடுதல் அல்லது துவைத்துப் போடுதல் வீடு வாசல் பெருக்குதல் போன்ற வேலைகளை செய்கிறார்கள். இம்மாதிரியான வேலைகள் அவர்களுக்கு சுமையாக இருப்பதற்கு பதிலாக சுகமாக செய்கிறார்கள்