Wednesday, December 28, 2011

சிவராத்திரி விரதம்

                                                                சிவராத்திரி விரதம் 




                     சிவராத்திரி அன்று காலையில் நீராடி முடித்து தமது ஊரில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று சிவராத்திரி விரத உறுதி மொழி எடுக்க வேண்டும் .அன்று சாப்பிட மாட்டேன்,தூங்கமாட்டேன் ,என் மூச்சு காற்று கூட சிவா சிவா என்றுத்தான் சொல்லும் .சிவன் நாமத்தை ஒவொருமுறையும் உச்சரிப்பேன்.என் புலன்களை அடக்கி ஆளும் வல்லமையை இறைவனிடம் கேட்டு பெறவேண்டும் .பின்பு வீட்டுக்கு வந்து குளர்ந்த நீர் மட்டும் குடித்து விரதத்தை தொடங்க வேண்டும் .சிவனின் பாடல்களை மட்டுமே பாட வேண்டும் .ஓம் நமசிவய என்ற திருநாமத்தை உச்சரிக்க வேண்டும் .பூஜை பொருட்கள் பால் ,தயிர் ,தேன்,நெய்,சர்க்கரை எடுத்து செல்ல வேண்டும் .சிவன் அபிசேக பிரியர் .எனவே இந்த பொருள்களால் அபிசேகம் செய்ய வேண்டும்.


        
          




           அபிசேகம் முடிந்தது முதல் ஜாமத்தில் அரிசி ,இரண்டாம் மூன்றாம் ஜாமங்களில் கோதுமை ,நான்காம்  ஜாமத்தில் அரிசி ,பயறு வகைகள் உளுந்து ,திணை ஆகியவற்றை அட்சதை செய்ய வேண்டும் .இவற்றை கானிகையாக கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும் ,


                      முதல் ஜாமத்தில் தாமரை ,வெள்ளை அரளி செவ்வரளி மலர்களாலும் ,இரண்டாம் ஜாமத்தில் தாமரை ,வில்வ இல்லைகள் ஆலும்,மூணாம் ஜாமத்தில் அருகம் புல்லலும் ,நாலாம் ஜாமத்தில் மல்லிகை ,பிச்சி ,செண்பகம்,உள்ளிட்ட அணைத்து வித நறுமண பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் .சிவா ராத்திரி அன்று விரத முறையை கடைபிடித்து நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் .......... 




                               மனிதர்கள் தினமும் செய்ய வேண்டியவை 


                 தேவயாகம் :தினமும் ஆலயங்களுக்கு சென்று தெய்வ தரிசனம் செய்ய வேண்டும் .


                 பூதயாகம் :தினமும் ஒரு பிராணிக்கு உணவு இட வேண்டும் .


                 மனிதயாகம் :ஒருவருக்கு தினமும் உணவு அளிக்க வேண்டும் 


                 பிரமயாகம் :காலையில் மாலையில் இறைவனின் நாமங்களை சொல்ல வேண்டும் .


                 பிதுர்யாகம்:மறந்த முன்னோர்களை தினமும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.




                                                                   லிங்கங்கள்
                 
                


          தர்ப்பைபுல் லிங்கம் :லக்ஷ்மி கடாச்சம் 


         ஆற்றுமணல் லிங்கம் :மோட்சம் தரும் .
   
         வெண்ணை லிங்கம் :நல்வாழ்வு தரும் .


        அரிசி லிங்கம் :சிறப்புகளை தரும் .


        அன்ன லிங்கம் :தீர்காயுளை தரும் .


        களிமண் லிங்கம் :மனசாந்தியை தரும் .


         பசும்சான லிங்கம் :ஆரோக்கியம் தரும் .


                                         
                              

No comments:

Post a Comment