Friday, December 30, 2011

ஆடி மாதம் புதிதாக திருமணம் ஆன தம்பதியரை பிரித்து வைக்க வேண்டுமா ?



ஆடி மாதம் தம்பதியர் ஒன்றாக இருந்து கற்பமுண்டானால் பிரசவம் சித்திரை மாதம் வரும். சித்திரைக்கு அப்பன் தெருவில் நிற்பான் என்பது பழமொழியாகும். சூரியன் உச்சம் பெரும் மாதம் சித்திரை மாதம் ஆகும். சூரியன் உச்ச காலத்தில் தன்னுடைய முழு கிரணங்களையும் பூமி மீது வலிமையாக செலுத்தும். இதனால் அல்ட்ரா வயலெட் கதிர்கள் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கும். எனவே இது குழந்தைகளுக்கு உகந்தது அல்ல. இக்கதிர்கள் இளம் சிசுக்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்பதால் இக்காலங்களில் பிரசவம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். பொதுவாகவே ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றால் அவர் மிகுந்த மன வலிமை உள்ளவராக இருப்பர். யாருக்கும் அடிபணிய மறுப்பர், தான் சொல்வதே சரி என்னும் மனோநிலையானது இருக்கும். இதே சூரியன் ஆறாமிடதிலோ அல்லது எட்டாமிடதிலோ  உச்சமானால் அவர்கள் அரசாங்க விரோதமான அல்லது சட்டத்திற்கு புறம்பான காரியங்களை செய்ய சிறிதும் அஞ்சமாட்டார்கள். இதுவே ஜெயில் கிரகம் எனப்படும். இந்த சூரியன் உச்சம் பெறுவதோடு ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து ஆறாமிடம் அல்லது எட்டாமிடத்தில் இருந்து விட்டால் அந்த சாதகனின் தந்தை ஆயுளையே குறைத்துவிடும். எனவே தான் ஆடியில் பிரித்துவைக்கும் ஒரு முறையை தமிழன் கண்டு பிடித்தான். இதை வேத காலம் தொட்டு பின்பற்றிவருகின்றோம். ஆனால் அப்போது இருந்ததை விட தற்காலத்தில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டதால் தற்போது அல்ட்ரா வயலெட் கதிர்கள் தாக்கம் அதிகமாக உள்ளது என்பது நவீன அறிவியலின் முடிவாகும். இதைதான் வேத காலங்களிலேயே ஞான திருஷ்டியால் கண்டுபிடித்து சொல்லி வைத்தார்கள். இந்த தாத்பர்யம் புரியாததால் நமக்கு இது மூட நம்பிக்கையாக தெரிகிறது. ஆகவே ஆடியில் பிரிந்திருப்பது என்பது அவசியமானது.

No comments:

Post a Comment