Saturday, October 6, 2012

ஏழாவது வீட்டில் சனி நின்றால் திருமண தடை ஏற்படுமா ?

                                                       
                        ஏழாவது வீட்டில் சனி நிற்பது திருமணத்தை தாமதப்படுத்தும்,

ஆனால் திருமண தடையாக இருக்காது. பன்னிரண்டு ராசிக் கட்டத்தையும்

ஒரு சுற்று சுற்றிவர சந்திரன் எடுத்துக்கொள்ளும் காலமானது சுமார் ஒரு

மாதமாகும், அதே சுற்றுப்பாதையை சூரியன் சுற்றிவர எடுத்துக்கொள்ளும்

கால அளவானது சுமார் ஒரு வருடமாகும், குரு பகவான் ஒரு சுற்றுக்கு

எடுத்துகொள்ளும் காலமானது சுமார் பன்னிரண்டு வருடங்களாகும், ஆனால்

சனி பகவானோ இதற்க்கு எடுத்துக்கொள்ளும் கால அளவானது சுமார் முப்பது

வருடங்களாகும். அறிவியல் ரீதியாக இதற்க்கு காரணம் சனி பகவான்

சூரியனிடமிருந்து மிக தொலைவில் இருப்பதால் அதனுடைய சுற்றுப்பாதை

மிக நீளமானதாகும். ஜோதிட ரீதியாக சனி பகவான் ஒரு ராசிக்கு இரண்டரை 

ஆண்டுகாலம் சஞ்சாரம் செய்வதே காரணமாகும். சனீஸ்வர பகவான் ஏழாம் 

இடத்தை பார்த்தாலும் ஓரளவிற்கு திருமணம் தாமதமாகவே செய்யும் 

என்பதே விதியாகும். 

                             சனி மட்டுமே ஏழாவது வீட்டில் இருந்தால் திருமணம் மிக 

தாமதமாகுமே தவிர திருமணம் என்பது எட்டாக்கனி அல்ல. இறை அருளால் 

திருமணம் தாமதமானாலும் சிறப்பாகவே நடைபெறும். எத்தனையோ 

ஜாதகர்களுக்கு ஏழாவது வீட்டில் சனி இருந்தும் மிக சிறப்பான திருமண 

வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்களை எனது அனுபவத்திலேயே 

பார்த்திருக்கிறேன். இருப்பினும் திருமணமே நடக்க கூடாது என்றால் 

அவர்களுக்கு லக்னத்திற்கு இரண்டாம் இடத்து அதிபதியான குடும்பாதிபதியும் 

ஏழாம் வீட்டு அதிபதியான களத்திராதிபதியும் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் 

வீடுகளில் மறைந்திருந்தால் இம்மாதிரியான ஜாதகர்களுக்கு உறுதியாக 

திருமணம் என்பது இல்லை என்று கூறிவிடலாம் ஆனால் சனி 

ஏழில்இருந்தால் திருமணம் ஆகாது என்பது " வெள்ளையாக இருந்தால் பால் "

என்பது போன்றதாகும். எனவே சனி பகவான் எழாமிடத்தில் இருந்தாலும் 

அவர்களுக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 

அமைதியான திருமண வாழ்க்கை அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

                        நமது நேயர்களுடைய மிக பெரிய கேள்வியே எழில் சனி பகவான் 

இல்லாவிட்டாலும் திருமண வாழ்க்கை என்பது மிக பெரிய போராட்டமாக 

இருப்பது ஏன் ? என்பதுதான். இதற்கான ஜாதக அமைப்பை அடுத்த பதிவில் 

காண்போம்.

3 comments:

sridhar v said...

My son with Simha Rasi and Simha Lagnam, has Sani alone in 7th house Kumbam and aspected by Guru in 3rd house TULA, 5th house spoiled with Sun, Mars, Mercury and Sukra in DHANU (01-01-1994; 10.43 PM, Kalyan, Mumbai) will 7th Sani affect his marriage and will he get girl from lower caste than his brahmin caste. as generally Sani is associated with lower levels.

sridhar v said...

Sub: Guru peyarchi palangal 2013-14
Whereas your speech is very good, interesting and pleasing to hear, for both Mesham and Simham, nothing has happened of what all you said. Total flop.
My son is Simha Lagnam, Simha Rasi; Guru in 3(Tula); Rahu in Vrischik; Sun, Mars, Budha & Sukra in 5th house Dhanu; Sani in 7th Kumbham; Rishabha Ketu. d.O.B: 01-01-1994; 10.43 PM; Place - Kalyan, Mumbai

Self & Wife Mesha Rasi, I can understand that 3rd Guru could have done no good; with Maraka sani in 7 with Rahu & Ketu in Mesha Rasi itself . 05-05-1951; 07.21 PM, Meerut, UP. Horrible life of failures in all aspects of life and life long financial struggle and unsteady jobs, divorce.

V. Sridhar

astrochinnaraj said...

ராசி பலன் என்பது உங்கள் ஒரு குடும்பத்தை மட்டும் வைத்து கணிப்பது அல்ல. அதற்கு உங்கள் குடும்ப ஜாதகத்தை உங்கள் குடும்ப ஜோதிடரிடம் காண்பித்து பலன் அறியவும். இங்கு சொல்லப்படும் பலன்கள் உங்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சிம்ம மற்றும் மேஷராசிக் காரர்கள் அனைவருக்கும் சொல்லப்படும் பொது பலன்களே ஆகும். ஒரு ஜாதகத்தில் அஷ்டமாதிபதி எனப்படும் எட்டாமிடத்து அதிபதி திசை நடந்தால் அவருக்கு எந்த கிரக பெயர்ச்சி ஏற்ப்பட்டாலும் மாற்றம் என்பது அரிதே.உங்களுடைய திசை மற்றும் புக்தி என்ன சொல்கிறதோ அதை அனுசரித்தே கோசார பலன்களும் நடைபெறும் என்பதே ஜோதிட விதியாகும். இதனாலேயே ஜோதிடத்தின் மீதும் ஜோதிடர்களின்மீதும் சமையத்தில் நம்பிக்கை இழக்க வேண்டிய சூழ்நிலை சிலருக்கு ஏற்ப்பட்டு விடுகிறது.

Post a Comment