Sunday, April 6, 2014

ராகுவும் குடும்ப வாழ்க்கையும்

             

                                                                       


                         ஜாதகத்தில் ராகு அல்லது கேது பகவான் லக்னத்திற்கு இரண்டாமிடத்திலோ அல்லது எழாமிடத்திலோ இருந்தால் அது சர்ப்ப தோஷம் பெற்ற ஜாதகம் எனப்படுகிறது. இவ்வாறு ராகு கேது உள்ள ஜாதகங்களுக்கு இன்னொரு நாக தோஷம் உள்ள ஜாதகத்தை மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது எப்படி செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு இன்னொரு செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை சேர்க்க வேண்டும் என்று சொல்கின்றோமோ அதே போல இந்த சர்ப்ப தோஷத்திற்கும் சொல்வது என்பது வித்தியாசமான நிபந்தனை ஆகும். இதற்கும் ஒரு படி மேலே போய்  ஒரு சில ஜோதிடர்கள் நீங்கள் பார்க்கும் வரனுக்கு இரண்டாமிடத்தில் ராகு அல்லது எட்டமிடத்தில் ராகு இருக்க வேண்டும் அதே போல சனி ஐந்தாமிடத்தில் இருக்குமாறு ஜாதகம் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதோடு மட்டுமல்லாமல் ஜாதகம் பார்க்க செல்பவர்கள் கைகளிலேயே குறித்தும் கொடுத்து அனுப்புகிறார்கள். 

         வரன் தேடும் பெற்றோர்களும் இந்த குறிப்புகளை கைகளில் வைத்துக்கொண்டு திருமண தகவல் மையங்களில் கடலில் ஊசியை தொலைத்து விட்டு தேடுவதுபோல தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.ஒவ்வொரு பெற்றோரும் இந்த வரன் அமைந்து திருமணம் கை கூடுமா அல்லது அந்த வரன் அமைந்து திருமணம் கூடுமா ? என்ற மிகுந்த எதிர்பார்ப்போடு பரிதவிப்பது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய நிகழ்வாகும். மிகுந்த சிரமத்திற்கு பின்னர் ஒரு வழியாக எழில் ராகு அல்லது எட்டில் கேது இரண்டில் சனி என்பது போன்ற ஜாதகத்தை கண்டுபிடித்தபின் அந்த வரனின் படிப்பு வசதி , வேலை , தொலைவு , சமூக அந்தஸ்த்து , இதுபோன்ற காரணங்களால் பொருந்தாமல் போய்  விடுவதும் உண்டு. எனவே இது போன்ற சமுதாய காரணிகளை முன்னிறுத்தி தனது தேடுதலில் கிடைத்த ஜாதகங்களை ஜோதிடரிடம் கொண்டு சென்றால் அவர் ஒரே வரியில் இந்த ஜாதகம் எட்டில் கேது இல்லை எனவே பொருந்தாது என்பது போன்ற பதில்களை ஜோதிடர்கள் சொல்லும்போது ஏற்படும் மன வருத்தமானது சொல்லில் அடங்காது. ஒரு முறை திருமண தகவல் மையத்தில் ஜாதகம் தேர்ந்து எடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு நண்பர் கூறிய  வார்த்தை இன்னும் காதில் ஒலித்துக்கொண்டு  உள்ளது.      " இந்த இடத்தில் ராகு இருக்கவேண்டும் அந்த இடத்தில் கேது இருக்க வேண்டும் என்பது போன்ற ஜோதிடர்களின் தகவலுடன் இங்கு வரனின் கோப்பை தேடும் பொது எதோ ஆங்கிலப் படத்தை புரியாமல் பார்ப்பது போன்று  உள்ளது  " என்ற அவரது வார்த்தை மிக மன வேதனை அடைந்து இருப்பதை அப்பட்டமாக காட்டுகிறது. 

                ஒரு வழியாக இந்த சோதனைகள் எல்லாம் முடிந்தபோது குறிப்பாக பெண் வீட்டாராக இருந்து விட்டால் இன்னும் சோதனை முடியவில்லை என்பது போன்று ஆகிவிடுகிறது. 

                                                                           

                       மேலே கொடுக்கப்பட்டுள்ள  உதாரண ஜாதகம் ஒரு மாப்பிள்ளை ஜாதகமாகும்  இதில் நடப்பு தசை ராகு தசை குரு புத்தி. இந்த ஜாதகத்தில் எட்டில் குரு செவ்வாயுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது. அயன சயன போகாதிபதியான குருவினுடைய புத்தியில் நிச்சயமாக திருமணம் நடந்துவிடும். அனால் இந்த குரு புத்தி சுமார் ஒரு வருடத்தில்  முடிந்துவிடும்.பின்னர், நடக்க போகும் சனிபுத்தியானது ஏழாமிடத்தில் வக்கிர கதியில் உள்ளது, பொதுவாக மூன்றாமிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ தனிமையில் இருந்து திசை நடத்தும்போது அவர்களுக்கு அமைதியான அல்லது நிம்மதியான குடும்ப வாழ்க்கை கிடைப்பது இல்லை. எனவே இந்த உதாரண ஜாதகத்தில் குரு புத்தி முடிந்தவுடன் துவங்கும் சனி புத்தியானது நிச்சயமாக குடும்ப வாழ்வில் பிரச்சனைகளை உருவாக்கப் போகிறார். மேலும் ராகு சட்ட ரீதியான கிரகம் என்பதால் இவருடைய வாழ்க்கையில் குடும்ப பிரச்சனைகளுக்காக நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை ஏறவேண்டிய சூழ்நிலையை உருவாக வாய்ப்பு  உண்டு. 

                 ஆனால் நடப்பது என்ன ? இந்த மணமகனின் பெற்றோர்கள் தங்கள் வரனுக்கு ஐம்பது சரவன் நகை மற்றும் சீர்வரிசைகள் என்று தங்களது எதிர்பார்ப்பை கூறியுள்ளனர். இவ்வளவு நகை சீர் வரிசைகளுடன் வரும் ஒரு பெண் எவ்வாறு இந்த மாமியார் அல்லது மாமனாருக்கு அடிப்படை தேவைகள் மற்றும் சேவைகளை செய்வார். இந்த அளவு சீர் வரிசை செய்ய தகுதியுடைய பெற்றோர்கள் தங்களது மகளை எந்த அளவுக்கு படிக்க வைத்து இருப்பார், எந்த அளவுக்கு செல்லமாக வளர்த்து இருப்பார். எந்த வேலையும் செய்ய விடாமல் தனது மகளை படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த வைத்து இருப்பார். அடுத்த வீட்டுக்கு செல்லும் பெண்தானே அவள் இங்கு இருக்கும்வரை சந்தோஷமாக இருக்கட்டும் என்று தந்து மனைவியையும் வேலை சொல்ல விடாமல் வைத்து வளர்த்திருப்பார். 

                          இவ்வளவு கேப்பிடேசன் பீஸ் கொடுத்து வந்துவிட்டு வேலையும் பார்த்து சம்பளத்தையும் கொடுத்துவிட்டு அடிமையாக இருக்க வேண்டும் என்பர். இங்கு தான் பிரச்னை விஸ்வருபம் எடுக்கிறது. எனவே பிரிவு என்பது தவிர்க்க முடியாததாகிறது. இருப்பினும் இந்த மாதிரி ஜாதகங்களை தெரிந்து எடுத்து விலக்குவது முக்கியமானதாகும். பத்து ரூபாயிக்கு கத்திரிக்காய் வாங்குவதையே அமுக்கி பார்த்து நசுக்கிப்பார்த்து வாங்கும் நாம் மாப்பிள்ளை தேர்ந்து எடுப்பதில் எந்த அளவு கவனமாக இருக்கவேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

                                                                      

No comments:

Post a Comment